ஆசிரியர்கள் மலைகிராமங்களுக்கு சென்று பாடம் கற்பிக்க அறிவுறுத்தல்
ஆசிரியர்கள் மலைகிராமங்களுக்கு சென்று பாடம் கற்பிக்க அறிவுறுத்தல்
UPDATED : ஜூலை 14, 2021 12:00 AM
ADDED : ஜூலை 14, 2021 01:35 PM
அரூர்:
&'&'மலை கிராமங்களில், குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று, ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க வேண்டும்,&'&' என, மாவட்ட பழங்குடியினர் நலத்திட்ட அலுவலர் கதிர்சங்கர் பேசினார்.
அரூர் தாலுகா அலுவலக வளாகத்தில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் இயங்கும் அரசு உறைவிட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் ஆலோசனை கூட்டம், தனி தாசில்தார் பெருமாள் தலைமையில் நடந்தது.
இதில், மாவட்ட பழங்குடியினர் நலதிட்ட அலுவலர் கதிர்சங்கர் பேசியதாவது:
கொரோனா தொற்று ஊரடங்கால், மலைகிராமங்களில் உள்ள பழங்குடியினர் சமூக மாணவ, மாணவியரின் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கல்வி பெற ஏதுவாக, நடமாடும் கல்வி கற்பிக்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
நடமாடும் ஊர்திகள் மூலம், அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் குடியிருப்பு பகுதிகளில் பாடம் கற்பிக்கும் வகையில் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே, மலை கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பணிபுரிந்த சிறப்பு ஆசிரியர்களை இந்த பணிக்கு பயன்படுத்தலாம். இத்திட்டத்தில், 5 முதல், 14 வயது வரையிலான மாணவ, மாணவியருக்கு கல்வி கற்பிக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.
