தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சரஸ்வதி பாடலுடன் வகுப்பை துவக்கும் இஸ்லாமிய பள்ளி

சரஸ்வதி பாடலுடன் வகுப்பை துவக்கும் இஸ்லாமிய பள்ளி

சரஸ்வதி பாடலுடன் வகுப்பை துவக்கும் இஸ்லாமிய பள்ளி


UPDATED : நவ 16, 2009 12:00 AM

ADDED : நவ 16, 2009 03:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2009 12:00 AM ADDED : நவ 16, 2009 03:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அம்பேத்கர் நகர்: உத்தரபிரதேசத்தில் உள்ள இஸ்லாமிய பள்ளியில், தினமும் சரஸ்வதி பாடலுடன் வகுப்பு ஆரம்பமாகிறது.


உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில், சதாசிபூர் கிராமம் உள்ளது. கடந்த 33 ஆண்டுகளாக இந்த பகுதியில், மெஹ்ரப் ஹாஷ்மி என்பவர் இஸ்லாமிய பள்ளியான மதரசாவை நடத்தி வருகிறார்.


இந்த கிராமத்தில் 40 சதவீதம் பேர் முஸ்லிம்கள். இந்த கிராமத்தில் வேறு பள்ளி இல்லாத காரணத்தால், பெரும்பான்மையான இந்துக்களும் தங்கள் குழந்தைகளை இங்கு  தான் சேர்த்துள்ளனர். ஆங்கிலம், இந்தி, உருது, பாரசீகம், அரபு ஆகிய மொழிகள் இந்த பள்ளியில் போதிக்கப்படுகின்றன. பைபிள், பகவத் கீதை ஆகியவையும் போதிக்கப்படுகின்றன. காலையில் பள்ளி துவங்கியதும், பிரார்த்தனைக் கூடத்தில், சரஸ்வதி பாடலுடன் வகுப்புகள் ஆரம்பமாகிறது. ராமாயணம் போன்ற இதிகாசங்களும் இந்த பள்ளியில் போதிக்கப்படுகின்றன.


‘இஸ்லாமிய பள்ளியாக இருந்தாலும், மதசார்பற்ற முறையில் பாடங்கள் போதிக்கப்படுவதைக் கண்டு, அரசியல்வாதிகள் பலர் பாராட்டி விட்டு செல்கின்றனர். இருப்பினும், இந்த பள்ளியின் வளர்ச்சிக்கு அவர்கள் எந்த உதவியும் செய்வதில்லை. ஊர் மக்கள் கொடுக்கும் நன்கொடை மூலம் தான் பள்ளியை நடத்தி வருகிறேன்’ என, மெஹ்ரப் ஹாஷ்மி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us