அமெரிக்காவில் சர்வதேச மாணவர்கள்: இந்தியா தொடர்ந்து முதலிடம்
அமெரிக்காவில் சர்வதேச மாணவர்கள்: இந்தியா தொடர்ந்து முதலிடம்
UPDATED : நவ 17, 2009 12:00 AM
ADDED : நவ 17, 2009 05:24 PM
2008-09ல் மட்டும் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 260 இந்திய மாணவர்கள் அமெரிக்கா சென்றுள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 9 சதவீதம் அதிகம். சர்வதேச கல்வி நிறுவனம் (ஐ.ஐ.இ.,) நடத்திய ஆய்வு முடிவில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை அடுத்து, சீன மாணவர்கள் 98 ஆயிரத்து 510 பேர் அமெரிக்கா சென்றுள்ளனர். இது 21 சதவீதம் அதிகம். வடகொரியா 9 சதவீத அதிகரிப்பில், 75 ஆயிரத்து 65 மாணவர்களுடன் மூன்றாமிடம் வகிக்கிறது.
இவ்வாறு 2008-09ல் அமெரிக்கா சென்றுள்ள ஒட்டுமொத்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 71 ஆயிரத்து 616. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 8 சதவீத கூடுதல் ஆகும். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகமே சர்வதேச மாணவர்களின் பிரதான கல்வி நிறுவனமாக உள்ளது. இதனையடுத்து, நியூயார்க் மற்றும் டெக்சாஸ் பல்கலைக்கழகங்களை சர்வதேச மாணவர்கள் ஆர்வமுடன் தேர்வு செய்கின்றனர்.
பிசினஸ், மேனேஜ்மென்ட், இன்ஜினியரிங், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களையே இம்மாணவர்கள் பெரும்பாலும் தேர்வு செய்கின்றனர். எது எப்படியோ, அமெரிக்கா பொருளாதாரத்தில் சர்வதேச மாணவர்களின் பங்களிப்பு 17.8 பில்லியன் டாலர்.
