UPDATED : நவ 18, 2009 12:00 AM
ADDED : நவ 18, 2009 12:58 PM
அ நிறம் | அளவு
அந்த அறிக்கை விவரம்: முப்பது ஆண்டுகளாக முதுகலைஆசிரியர்களுக்கும், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு இருந்தன. ஆனால் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும், கல்வி அலுவலராகவும் பதவி உயர்வு பெறலாம்.
இந்த வேறுபாட்டை நீக்க முதுகலை ஆசிரியர்களும், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் இணைந்து போராடினர். இதனால் ஜெகநாதன்கமிஷன் அமைக்கப்பட்டது. இக்கமிஷன் தீர்ப்பு வரும் வரை அனைவரும் பொறுத்திருக்க வேண்டும். தற்போது உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் அறிவிக்கப் பட்டுள்ள பதவி உயர்வு வாய்ப்புகள்நியாயமானதே என தெரிவித்துள்ளார்.
