தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதம் மாறிய பரவர் எம்.பி.சி., பட்டியலில் சேர்ப்பு

மதம் மாறிய பரவர் எம்.பி.சி., பட்டியலில் சேர்ப்பு

மதம் மாறிய பரவர் எம்.பி.சி., பட்டியலில் சேர்ப்பு


UPDATED : நவ 19, 2009 12:00 AM

ADDED : நவ 19, 2009 09:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2009 12:00 AM ADDED : நவ 19, 2009 09:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழக அரசு கடந்த 1989ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை தாலுகா மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பரவர் இனத்தவர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தனர். செங்கோட்டை தாலுகா மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பரவர் இனத்தவரை, மத்திய அரசு ஆதிதிராவிடர் பட்டியலில் வைத்துள்ளது.

இந்நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த, கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிட பரவர் இனத்தவர்கள், தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ஏற்று, கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் செங்கோட்டை தாலுகாவைச் சேர்ந்த, கிறிஸ்தவ மதம் மாறிய பரவர் இனத்தவரையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us