தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி வளாகம் ஆக்கிரமிப்பால் பாதிப்பு: வால்பாறையில் அவலம்

பள்ளி வளாகம் ஆக்கிரமிப்பால் பாதிப்பு: வால்பாறையில் அவலம்

பள்ளி வளாகம் ஆக்கிரமிப்பால் பாதிப்பு: வால்பாறையில் அவலம்


UPDATED : நவ 22, 2009 12:00 AM

ADDED : நவ 22, 2009 06:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2009 12:00 AM ADDED : நவ 22, 2009 06:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்போது ஆயிரத்து 749 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். கடந்த 55 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளியின் ஒரு பகுதியின் மேற்கூரை சீரமைக்கும் பணியும், எட்டு லட்சம் ரூபாய் செலவில் தடுப்புச்சுவர் கட்டும் பணியும் நடந்து வருகிறது.

மேலும், 1.80 கோடி ரூபாய் மதிப்பில் 14 வகுப்பறைகள், ஒரு பரிசோதனைக்கூடம், இரண்டு கழிப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சொந்தமான 7.3 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில் சிலர் அத்துமீறி வீடுகட்டியும், கடைகள் வைத்தும் அரசு நிலத்தை கபளீகரம் செய்து வருகின்றனர். இதனால் பள்ளியை விரிவுபடுத்த முடியாமல் பள்ளி நிர்வாகத்தினர் திணறி வருகின்றனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன் கூறுகையில், பள்ளிக்கு சொந்தமான இடத்தில் சிலர் வீடு கட்டியும், கடைகள் வைத்தும் ஆக்கிரமித்துள்ளனர். இதை மீட்டு தரக் கோரி நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை விடுத்தும், யாரும் கண்டு கொள்ளவில்லை. பள்ளி நலன் கருதியும், தடுப்புச்சுவர் கட்டவேண்டும் என்பதாலும், ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் தாங்களாகவே கடைகளை அகற்ற வேண் டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us