தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பெற்றோரே உஷார்! குழந்தை ஒழுங்கா பள்ளிக்கு செல்கிறதா?

பெற்றோரே உஷார்! குழந்தை ஒழுங்கா பள்ளிக்கு செல்கிறதா?

பெற்றோரே உஷார்! குழந்தை ஒழுங்கா பள்ளிக்கு செல்கிறதா?


UPDATED : நவ 27, 2009 12:00 AM

ADDED : நவ 27, 2009 01:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2009 12:00 AM ADDED : நவ 27, 2009 01:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு


இதனால், தேர்ச்சி விகிதம் குறைவதுடன், எதிர்காலமும் பாதிக்கப்படகூடிய சூழல் நிலவுகிறது. உரிய அறிவிப்பின்றி தொடர்ச்சியாக சில நாட்கள் மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டால், கடிதம் மூலமாக பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும் என, கல்வி ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


அரசு பள்ளிகளில் படிக்கும் ஒருசில மாணவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து, பள்ளிக்கு சரிவர செல்வதில்லை. வீட்டில் பள்ளிக்கு செல்வதாக கூறி புத்தக பைகளுடன் செல்கின்றனர்.
 
ஆனால், பள்ளிக்கு செல்லாமல் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள தண்ணீர் டேங்க், பார்க் ஆகிய இடங்களில் புத்தகப்பையை வைத்து விட்டு, அத்துமீறி வெளியே ஜாலியாக ஊர் சுற்றுகின்றனர். மீண்டும் மாலையில் வைத்த இடத்திலிருந்து புத்தக பையுடன் வீடு திரும்புகின்றனர். நகர்ப்பகுதி மட்டுமின்றி கிராமங்களிலும் இதுபோன்ற அத்துமீறல் வாடிக்கையாக தொடர்கிறது. மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவதுடன், எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது.

கல்வி ஆர்வலர்கள் கூறியதாவது: அரசுப்பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் இதுபோன்ற அத்துமீறில்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். சமீபத்தில் மாக்கினாம்பட்டியில் இதுபோன்று இரு மாணவர்கள் எஸ்கேப் ஆகியுள்ளனர். ஆனால், நான்கு நாட்கள் கழித்துதான் வீடு திரும்பினர். விசாரிக்கையில் பல நாட்களாக அவர்கள் பள்ளிக்கு சரிவர செல்லாதது தெரிய வந்துள்ளது.


எனவே, மாணவர்கள் விடுமுறை எடுக்கும் போது அனுமதி கடிதம் அளிக்குமாறு வலியுறுத்த வேண்டும். விடுமுறை கடிதம் அளித்தாலும், அளிக்காவிட்டாலும் தொடர்ச்சியாக சில நாட்களுக்கு மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டால், உடனடியாக கடிதம் மூலமாக பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான், பிரச்னைக்கு தீர்வு காண முடியும்; மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படாது. இவ்வாறு, கல்வி ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: சரிவர வராத மாணவர்கள் குறித்த தகவல்கள் தனியாக பதிவேட்டில் பராமரிக்கப்படுகிறது. ஒருசில ஆசிரியர்கள் நரிடையாக குறிப்பிட்ட மாணவர்களின் வீட்டிற்கே சென்று தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால், அனைத்து பள்ளிகளிலும் இது சாத்தியமில்லை.  நிதி பற்றாக்குறை காரணமாக கடிதம் மூலமாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க முடியாத சூழல் நிலவுகிறது. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் சரியாக படிக்கிறார்களா, பள்ளிக்கு முறையாக வருகிறார்களா என விசாரிப்பதில்லை. மாதம் ஒரு முறையாவது பள்ளி வந்து ஆசிரியர்களிடம் தங்கள் குழந்தைகள் குறித்து தகவல் அறிய வேண்டும். அப்போதுதான், மாணவர்கள் பள்ளிக்கு முறையாக வரக்கூடும். இவ்வாறு, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us