தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நாடு முழுதும் ஏழை குழந்தைகளுக்கு சுகாதார அட்டை

நாடு முழுதும் ஏழை குழந்தைகளுக்கு சுகாதார அட்டை

நாடு முழுதும் ஏழை குழந்தைகளுக்கு சுகாதார அட்டை


UPDATED : நவ 29, 2009 12:00 AM

ADDED : நவ 29, 2009 11:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2009 12:00 AM ADDED : நவ 29, 2009 11:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இத்திட்டத்தின்படி, ஏழைக் குழந்தைகளுக்கு எலக்ட்ரானிக் சுகாதார அட்டை வழங்கப்படும்.ஏழைக் குழந்தைகள் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு வசதியாக, புதிய திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள ஏழைக் குழந்தைகளை கணக்கிட்டு, அவர்களுக்கு எலக்ட்ரானிக் சுகாதார அட்டை வழங்கப்படவுள்ளது. இந்த அட்டையை பயன்படுத்தி, நாடு முழுவதும் உள்ள அரசுக்குச் சொந்தமான மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், இலவசமாக சிகிச்சை பெறலாம். இந்தியாவில் சில மாநிலங்களில், குறிப்பிட்ட சிகிச்சைகளை மட்டுமே அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பெற முடியும். அதிக செலவாகும் சிகிச்சைகளை அரசு மருத்துவமனைகளில் பெற முடியாது. இந்த பிரச்னைகளை தவிர்க்கும் வகையில், தற்போது எலக்ட்ரானிக் சுகாதார அட்டை வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து, டில்லியில் நடந்த விழாவில் மத்திய சுகாதார இணை அமைச்சர் தினேஷ் திரிவேதி பேசியதாவது:தேசிய சிறப்பு அடையாள அட்டை வழங்கும் ஆணையத்தின் உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப் படவுள்ளது. இந்த ஆணையத்தின் தலைவர் நந்தன் நிலேகணியிடம் இதுகுறித்த தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன. ஏழைக் குழந்தைகள் யார் என்பதை அடையாளம் கண்டு, அதுகுறித்த தகவல்களை சேகரிக்கும் பணி, தேசிய சிறப்பு அடையாள அட்டை வழங்கும் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் சிகிச்சை பெறுவதற்கு வசதியாக, அனைத்து மருத்துவ வசதிகளையும் கொண்ட அரசு மருத்துவமனைகளை பற்றிய விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தினேஷ் திரிவேதி பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us