தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பெண்களால் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்: துணைவேந்தர்

பெண்களால் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்: துணைவேந்தர்

பெண்களால் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்: துணைவேந்தர்


UPDATED : டிச 02, 2009 12:00 AM

ADDED : டிச 02, 2009 01:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 02, 2009 12:00 AM ADDED : டிச 02, 2009 01:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு


திருச்சியில் தமிழக என்.எஸ்.எஸ்., அமைப்பு (நாட்டு நலப்பணித்திட்டம்), பாரதிதாசன் பல்கலை என்.எஸ்.எஸ்., மற்றும் காவேரி மகளிர் கல்லூரி என்.எஸ்.எஸ்., அமைப்பு இணைந்து நடத்தும் இரண்டு நாள் மாநில அளவிலான மகளிர் மேம்பாட்டு பயிலரங்கம் நேற்று காவேரி கல்லூரி வளாகத்தில் துவங்கியது. மகளிர் மேம்பாட்டு பயிலரங்க துவக்கவிழாவில் பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் பொன்னவைக்கோ பேசியதாவது:


பொதுவாக ஆண்களைவிட பெண்கள் அனைத்து வகைகளிலும் கூடுதல் திறன் பெற்றவர்களாக உள்ளனர். குறிப்பாக மேலாண்மை திறன் பெண்களுக்கு இயல்பாகவே இருக்கிறது. தலைமைப்பண்பு என்பது அனைவருக்கும் மிகவும் அவசியம். தங்களிடம் உள்ள அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதே தலைமைப்பண்பின் முக்கிய அம்சம். இதுதான் சிறந்த மேலாண்மைக்கான அடிப்படை கருத்து. ஒரு பணியை கீழ்நிலையில் உள்ள ஊழியர்களுக்கு தெரிவிப்பதுடன், அதை எப்படி செய்யவேண்டும் என்பதை சொல்ல வேண்டும் என்பதே தலைமைப்பண்பாகும். தலைமைப்பண்பில் உள்ளவர் தனக்கு கீழ் உள்ளவர்களுக்கு பணிக்கான தீர்வையும், பணியில் முழு சுதந்திரமும், உரிமையும் கொடுக்கவேண்டும்.


அப்படிப்பட்ட தலைமைப்பண்பு இருந்தால் தான் ஒருவர் நல்ல தலைவராக இருக்க முடியும். பணியை கொடுத்துவிட்டு அதன்விளைவுகளை மட்டுமே எதிர்பார்க்கவேண்டும். இடையில் எவ்வித இடையூறும் செய்யக்கூடாது. நமக்கு கீழே பணியாற்றுபவர்களின் பெருமைகளையும், ஆற்றலையும் வெளியே சொல்லவேண்டும். அதேபோல், நம்முடைய பேச்சுத்திறன் சரியான முறையில் இருக்கவேண்டும். பேசுவது எந்த மொழியாக இருந்தாலும் நாம் பேசுவதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் தெளிவாக இருக்கவேண்டும். அந்த ஆற்றல் இருந்தால் நாம் வல்லவர்களாக ஆகமுடியும்.


எல்லா ஆற்றலும் கொண்ட பெண்ணினத்தால் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். அதுமட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்த முடியும். நாட்டின் வளர்ச்சி பெண்களின் கையில் தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


விழாவில் காவேரி மகளிர் கல்லூரி தலைவர் ஜெயராமன், செயலாளர் ரங்கராஜன், விடுதிச் செயலாளர் கோபிநாதன், கல்லூரி முதல்வர் சுஜாதா, பாரதிதாசன் பல்கலை என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் கனகராஜ், காவேரி கல்லூரி என்.எஸ். எஸ்., அலுவலர் கோமதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பயிலரங்கில் மாநிலம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவிகள் ங்கேற்றுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us