தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மணலில் விளையாடட்டும் குட்டீஸ்: ஆய்வில் வியப்பான தகவல்

மணலில் விளையாடட்டும் குட்டீஸ்: ஆய்வில் வியப்பான தகவல்

மணலில் விளையாடட்டும் குட்டீஸ்: ஆய்வில் வியப்பான தகவல்


UPDATED : டிச 02, 2009 12:00 AM

ADDED : டிச 02, 2009 01:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 02, 2009 12:00 AM ADDED : டிச 02, 2009 01:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உங்களுக்கான தகவல் தான் இது.அதாவது, குழந்தைகள் மணலில் புரண்டு விளையாடுவதால், அவர்களின் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக, விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து ஆய்வு நடத்திய விஞ்ஞானிகள் கூறியதாவது:குழந்தைகள் மணலில் புரண்டு விளையாடுவதால், மணலில் காணப்படும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அவர்கள் சருமத்தில் சேருகின்றன.

இதனால், குழந்தைகளின் தோல் பகுதியில் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, சிரங்கு மற்றும் புண் ஆகியவை ஏற்படுவது தடுக் கப்படுகிறது.அதே போன்று தீமை விளைவிக்கும் பாக்டீரியாக்கள் சருமத்தில் நுழைந்தாலும், நன்மை செய்யும் பாக்டீரியாக்கள், அவற்றை எதிர்த்து போராடி அழித்து விடுகின்றன.


மேலும், சருமத்தில் ஒவ்வாமை போன்றவை ஏற்படாமலும் தடுக்கின்றன.மிகவும் தூய்மையாக இருப்பதும் கூட ஒருவகையில் தோலின் ஆரோக்கியம் மற்றும் தானே குணமாகும் தன்மை ஆகியவற்றை குறைத்துவிடும். ஏனென்றால் தோலின் மேல் பகுதியில் காணப்படும் பாக்டீரியாக்களே, இதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us