தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாரதிதாசன் பல்கலையில் இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு அறிமுகம்

பாரதிதாசன் பல்கலையில் இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு அறிமுகம்

பாரதிதாசன் பல்கலையில் இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு அறிமுகம்


UPDATED : டிச 13, 2009 12:00 AM

ADDED : டிச 13, 2009 01:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 13, 2009 12:00 AM ADDED : டிச 13, 2009 01:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இதில் துணைவேந்தர் பொன்னவைக்கோ, பதிவாளர் ராமசாமி, தேர்வு கட்டுப்பாட்டாளர் ஸ்ரீதரன், நிலைக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் ஏற்கனவே மாற்றம் செய்யப்பட்ட பல்வேறு பாடத்திட்டங்களுக்கு பின் ஏற்பு ஒப்புதல் பெறப்பட்டது.

பின் கூட்டத்தில் பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் பொன்னவைக்கோ பேசியதாவது:

பி.எஸ்.ஸி., படிப்பவர்களை தொழில்நுட்ப கல்வி படிப்பவர்களோடு ஒப்பிடும் போது வேலைவாய்ப்பு அதிகம் கிடைப்பதில்லை. அதேபோல், மேல்நாடுகளுக்கும் உயர்கல்விக்கு செல்லமுடிவதில்லை. ஏனென்றால் நான்கு ஆண்டு பட்டப்படிப்பு படித்தால் தான் அங்கு உயர்கல்விக்கு செல்ல முடியும்.

ஆகையால், வரும் கல்வியாண்டில் பாரதிதாசன் பல்கலையில் பி.எஸ்., (இளநிலை அறிவியல்) என்ற நான்கு ஆண்டு பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்படுகிறது. இதைப்பற்றி நாம் ஆலோசித்தபோது தேசிய அளவில் அறிவியல் அமைப்புகள் பி.எஸ்.,சை பரிந்துரை செய்துள்ளன. இதற்கு பல்கலை மான்யக்குழு இரண்டு மாதத்துக்கு முன் ஒப்புதல் அளித்துள்ளது.

முதல்கட்டமாக பி.எஸ்., கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ டெக்னாலஜி, பயோ இன்பர்மேட்டிக்ஸ், ஜியோ சயின்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய ஐந்து பிரிவுகளை துவங்குகிறோம். இந்த படிப்பு பி.இ., பி.டெக்., படிப்புக்கு இணையானது.

இதை முடித்தால் எம்.இ., எம்.டெக்., நம்நாட்டிலும், வெளிநாட்டில் எம்.எஸ்., படிப்பிலும் சேரலாம். ப்ளஸ் 2 முடித்தவர்கள் இப்படிப்பில் சேரலாம். பி.எஸ்.ஸி., முடித்தவர்கள் நேரடியாக மூன்றாம் ஆண்டு பி.எஸ்., படிப்பில் சேரலாம். பல்கலையின் துறைகளிலும் புதிய படிப்பு நடத்தப்படும்.

தமிழக அரசு அனைத்து பிரிவினரும் அர்ச்சகராக ஆகலாம் என்று உத்தரவிட்டுள்ளது. அதற்காக பல்கலை சான்றிதழோடு அர்ச்சகரை உருவாக்கும் வகையில் வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நெறி அருட்சுனை என்ற ஓராண்டு பட்டயப்படிப்பு துவங்கப்பட உள்ளது. கோவில்களில் ஆகம விதிகள் படி மேற்கொள்ள வேண்டிய வழிபாடு, பாடல் போன்றவை பற்றியும், திருமணம் மற்றும் அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் பாடவேண்டிய தமிழ் மந்திரங்கள் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

இதற்காக தமிழ் அறிஞர்கள், அறிநிலைத்துறை அதிகாரிகள், பேராசிரியர்கள் என்று பலதரப்பினர் கொண்ட குழு அமைக்கப்பட்டு பாடத்திட்டம் உருவாக்கப்படும். இளநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் நேரடியாக பி.ஹெச்.டி., பட்டம் நேரடியாக வாங்கும் வகையில், முதுநிலை பட்டப்படிப்புடன் இணைந்த பி.ஹெச்.டி., பாடத்திட்டம் உருவாக்குவது தொடர்பாக கருத்துக்கள் தொகுக்கப்பட்டு அடுத்த நிலைக்குழு கூட்டத்தில் வைக்கப்படும். பொதுமாக மூன்று ஆண்டுக்கு ஒருமுறை பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பது விதி. இனிவரும் காலங்களிலும் அதை நடைமுறை படுத்துவோம். குறிப்பிட்ட சில வளர்ந்து வரும் பாடத்திட்டங்களில் மட்டும் தேவையான மாற்றங்கள் ஆண்டுதோறும் செய்து கொள்ளலாம்.

அதையும் பாடத்திட்ட குழுவினர் விரைவில் கூடி தேவையான மாற்றங்களை செய்து மார்ச் 31ம் தேதிக்குள் பல்கலையிடம் வழங்கவேண்டும். அது மே மாதம் கல்வி நிலைக் குழுவில் வைத்து ஒப்புதல் வழங்கப்படும். ஆனால், செமஸ்டர் ஆரம்பித்த பின் தான் பாடத்திட்டங்கள் ஒப்புதல் பெறப்படுகிறது. காலதாமதம் காரணத்தால் பழைய பாடத்திட்டத்தின் வினாத்தாள் வந்து விடுகிறது. இதை சரிசெய்ய பாடத்திட்டக்குழு ஒத்துழைக்க வேண்டும். அதேபோல், பல்கலையின் அனைத்து பாட வினாத்தாள்களும் ஒரேமாதிரியாக இருக்கும் வகையில் அமைக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us