தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதுச்சேரி மருத்துவக் கல்லூரி திறப்பு விழா எப்போது?

புதுச்சேரி மருத்துவக் கல்லூரி திறப்பு விழா எப்போது?

புதுச்சேரி மருத்துவக் கல்லூரி திறப்பு விழா எப்போது?


UPDATED : டிச 15, 2009 12:00 AM

ADDED : டிச 15, 2009 08:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 15, 2009 12:00 AM ADDED : டிச 15, 2009 08:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கதிர்காமத்தில் 35 ஏக்கர் பரப்பளவில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க முடிவு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் கடந்த 2006ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது. கல்லூரியை 234 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்க ஆரம்பத்தில் திட்டமிடப்பட் டது. பின், கல்லூரியின் திட்ட மதிப்பு 834 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.

நூறு கோடி ரூபாய்க்கு மேல் பணிகள் முடிவடைந்த நிலையில், அரசில் நிதிப் பற்றாக்குறை தலைதூக்கியதால் கட்டுமானப் பணிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி துவங்குவதற்கு தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக முண்டியம்பாக்கத் தில் 45 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, கடந்தாண்டு டிசம்பர் 15ம் தேதி கட்டுமானப் பணிகள் துவங்கியது. வரும் மார்ச் மாதம் 6ம் தேதியன்று முதல்வர் கருணாநிதியின் கையால் மருத்துவக் கல்லூரியை திறக்க தேதி குறிக்கப்பட்டு, பணிகள் முழு வேகத்தில் முடுக்கி விடப்பட் டுள்ளது.

பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு கல்லூரி தயாராகி வருகிறது. வரும் 2010-11ம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இந்த விஷயத்தில் தமிழகத்தை பார்த்து புதுச்சேரி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். எதற்கெடுத்தாலும் தமிழகத்தை சுட்டிக் காட்டும் புதுச்சேரி அரசியல்வாதிகள், மருத்துவக் கல்லூரி விஷயத்திலும் தமிழகத்தை பின்பற்ற வேண்டும். புதுச்சேரி மருத்துவக் கல்லூரி வரும் கல்வியாண்டில் துவக்கப்படும் என்று திரும்ப திரும்ப கூறிக் கொண்டிருக்காமல், தமிழகத்தைபோல கல்லூரி திறப்பு விழாவிற்கு தேதி குறித்து பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

அப்போதுதான் கட்டுமானப் பணிகளை வேகப்படுத்தி திட்டமிட்டபடி முடிக்க முடியும். தேதியை அறிவிக்காவிட் டால் மறுபடியும் நிதி நெருக்கடியை சுட்டிக் காட்டி முட்டுக் கட்டை போடும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

மேலும், விழுப்புரத்தில் ஆரம்பிக்கப்பட உள்ள அரசு மருத்துவக் கல்லூரி 500 படுக்கைகள் கொண்டது. இது, 00 கோடி ரூபாய் செலவில் மட்டுமே கட்டி முடிக்கப்பட உள்ளது. அதேசமயம் புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் 300 படுக்கைகள் மட்டுமே கொண்ட மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.

ஆனால் மருத்துவக் கல்லூரியின் மொத்த மதிப்பீடு 260 கோடி ரூபாய் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது. இங்கிருந்து 40 கிலோ மீட் டர் தூரத்தில் அமைந்துள்ள விழுப்புரத்திற்கும்- புதுச்சேரிக்கும் கட்டுமானப் பொருட்களின் விலை, கட்டுமானத் தொழிலாளர்களின் கூலி உட்பட எதற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது.தமிழகத்தைபோல சிக்கனமாகவும், விரைவாகவும் கட்டி முடிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுகாதாரத் துறை அமைச் சர் வல்சராஜ் அறிவித்தப்படி, அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை மீண்டும் துவக்குவதற்காக ஆயத்தப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கன்சாலிடேட்டடு கன்ஸ்ட்ரக்ஷன் கன்சார்டியம்(சிசிசி) என்ற நிறுவனம் ஏற்கனவே கட்டுமானப் பணிகளை மேற்கொண்டிருந்தது. இந்த நிறுவனத்திடமே மீண்டும் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த நிறுவனத்திடம் மறுபடியும் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக எந்த வேலையும் நடக்காததால் பல இடங்களில் புதர்கள் மண்டி விட்டது. கட்டுமானப் பணியை துவக்குவதற்கு வசதியாக சுத்தப்படுத்தும் பணியை தொழிலாளர் கள் மேற்கொண்டுள்ளனர். மருத்துவமனை கட்டடத்தில் 4 மாடிகளும், மருத்துவக் கல்லூரி கட்டடத்தில் 3 மாடிகளும் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டுள்ளது. உள் புற வேலைகள்தான் பாக்கி உள்ளது. அதேசமயம் மாணவ மாணவிகள் தங்குவதற்கான 4 ஹாஸ்டல்களில் 90 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு விட்டது. மீதியுள்ள பணிகளையும் முடிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.

முதல்கட்டமாக, கல்லூரியை வரும் கல்வியாண்டில் திறக்கும் வகையில் மருத்துவமனை பிளாக்கில் இரண்டு மாடிகளும், கல்லூரி பிளாக் கில் இரண்டு மாடிகளும் மட்டும் முழுமையாக கட்டி முடிக்கப்பட உள்ளது.

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியின் டீன் டாக்டர் சசீந்திரன் கூறும் போது, அமைச்சர் அறிவித்தபடி முதல்கட்டமாக 35 கோடி ரூபாய் மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்டு விட்டது. கட்டுமானப் பணிகள் மீண்டும் துவக்கப்பட் டுள்ளது. அடுத்தகட்ட தொகையை அரசு விரைவில் வழங்க உள்ளது. எனவே கட்டுமானப் பணிகள் திட்டமிட்டபடி முடிக்கப்பட்டு சேர்க்கை துவக்கப்படும். இந்திய மருத்துவக் கவுன் சில் குழு, ஏப்ரல் மாதத்தில் கல்லூரியை ஆய்வு செய்ய வருகை தரும் என்று எதிர் பார்க்கிறோம். அதற்கேற்ப பணிகள் முழு வீச்சில் முடிக் கப்படும். செப்டம்பர் முதல் வாரத்திற்குள் சேர்க்கை முடிக்கப்பட வேண்டும். பின், கல்லூரி முறைப்படி துவங்கும். முதலாண்டில் மூன்று மருத்துவ துறைகளுடன் கல்லூரி துவக்கப்படும். பின், மற்ற துறைகள் படிப்படியாக துவக்கப்படும். ஏற்கனவே நியமனம் செய்யப்பட்ட பேராசிரியர்கள் பலர், கல்லூரி துவக்கப்படாததால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்று விட்டனர். புதிதாக பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான பணிகளும் நடந்து வருகிறது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us