தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழகம் முழுவதும் சுற்றும் சாரணர் நூற்றாண்டு ரயில்

தமிழகம் முழுவதும் சுற்றும் சாரணர் நூற்றாண்டு ரயில்

தமிழகம் முழுவதும் சுற்றும் சாரணர் நூற்றாண்டு ரயில்


UPDATED : டிச 30, 2009 12:00 AM

ADDED : டிச 30, 2009 05:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 30, 2009 12:00 AM ADDED : டிச 30, 2009 05:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: பாரத சாரண சாரணீய இயக்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, தென்னக ரயில்வே ஏற்பாடு செய்துள்ள சாரணர் நூற்றாண்டு ரயில், இன்று (டிச. 30ம் தேதி) கோவை வந்தது. ஏராளமான பள்ளி மாணவ மாணவியர் கண்காட்சியை கண்டு களித்தனர்.


இந்தியாவில் சாரண இயக்கம் (ஸ்கவுட்) துவங்கி நூறு ஆண்டுகள் ஆகின்றன. நூற்றாண்டு விழா நாடு முழுவதும் பல்வேறு விதங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சாரண இயக்கம் குறித்து பள்ளி மாணவ மாணவியர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம், நூற்றாண்டு விழாவை கொண்டாட முடிவு செய்துள்ள தென்னக ரயில்வே, இதற்கென மூன்று பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயிலை தமிழ்நாடு முழுவதும் இயக்கி வருகிறது.


சென்னையில் கடந்த டிச. 21ல் தென்னக ரயில்வே பொது மேலாளர் தீபக் ரயில் கண்காட்சியை துவக்கி வைத்தார். பொதுமக்கள், மாணவர்கள் வசதிக்காக இரண்டு நாட்கள் சென்னையில் நிறுத்தப்பட்டிருந்த ரயில், டிச., 23ல் அங்கிருந்து கிளம்பி ஈரோடு, திருப்பூர் வழியாக இன்று வடகோவை ரயில்வே ஸ்டேஷனை வந்தடைந்தது.


மாநில உதவி ஆணையர் ஸ்ரீனிவாசன், கோவை மாவட்ட சாரண இயக்கத்தின் முதன்மை ஆணையர் ரங்கநாதன், தலைவர் குப்புசாமி, துணைத் தலைவர் நாகரத்தினம், செயலாளர் பிச்சைமுத்து ஆகியோர் கோவையில் சாரணர் ரயில் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். சாரண இயக்கம் தோன்றிய வரலாறு, உலகம் முழுவதும் உள்ள இயக்கத் தலைவர்கள், சாரண இயக்க புத்தகங்கள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. போர்க்காலங்களில் அவசர பாலங்கள், பார்வை மாடம், டைபிள் டேபிள், படுக்கை, கோபுரம் அமைப்பது, உணவு, தண்ணீர் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் மாதிரி அமைப்புகள், விளக்கப்படங்களும் இடம் பெற்றிருந்தன.


சாரணர் இயக்கத்தின் மாவட்ட துணை ஆணையர் சத்தியநாராயணன் கூறுகையில், “சாரண இயக்கத்தில் சேரும் மாணவன் வாழ்க்கை முழுவதும் மிகுந்த ஒழுக்கத்துடன் இருப்பான். காந்தி முதல் உலகம் முழுவதும் உள்ள முக்கியத் தலைவர்கள் இந்த இயக்கத்தின் உறுப்பினர்கள். இந்த தலைவர்கள் மற்றும் இயக்கத்தின் செயல்பாடுகளை காணும் பள்ளிக் குழந்தைகள், அதே போல் தாங்களும் மாறுவதற்கான உத்வேகத்தை இந்த கண்காட்சி அளிக்கும்,” என்றார்.


சாரணர் இயக்க தலைவர் குப்புசாமி கூறுகையில், “கோவை தவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும் சாரண ரயில் கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெறும். கேரளா மற்றும் தமிழகம் முழுவதும் சுற்றி விட்டு ஜன. 18ல் மீண்டும் சென்னை சென்றடையும். கண்காட்சியை காண அனுமதி இலவசம்,” என்றார். கோவையை சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவர்கள் சாரணர் ரயிலை பார்வையிட்டு அதிசயித்தனர். மாலையில் ரயில் பாலக்காடு புறப்பட்டுச் சென்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us