தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் பற்றாக்குறை: கல்வி உரிமை சட்டம் அமலாகுமா?

ஆசிரியர் பற்றாக்குறை: கல்வி உரிமை சட்டம் அமலாகுமா?

ஆசிரியர் பற்றாக்குறை: கல்வி உரிமை சட்டம் அமலாகுமா?


UPDATED : டிச 31, 2009 12:00 AM

ADDED : டிச 31, 2009 12:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 31, 2009 12:00 AM ADDED : டிச 31, 2009 12:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுகுறித்து, இந்த வார தொடக்கத்தில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம், ஆலோசனை நடத்தியது. இதில், ஆசிரியர்கள் நிலை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. கல்வி பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்துவதற்கு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வீதத்தில் காணப்படும் வேறுபாடு பிரச்னையாக உள்ளது. கல்வி பெறும் உரிமை சட்டத்தின் கீழ், 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும்.


இதுதொடர்பாக, மாநிலங்களை மூன்று பிரிவுகளாக பிரித்து அமைச்சரகம் கூறியதாவது:
ஆந்திரா, டில்லி, குஜராத், அரியானா, இமாச்சல் பிரதேசம், கேரளா, ம.பி., மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழகம் மற்றும் <உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில், 2.33 லட்சம் புதிய ஆசிரியர்கள் நியமிப்பது மற்றும் பணியில் இருக்கும் 94 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டியது அவசியம்.


கர்நாடகாவில், பயிற்சி பெறாத ஆசிரியர்கள் ஒருவர் கூட இல்லை. டில்லி, குஜராத், கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில், பயிற்சி பெறாத ஆசிரியர்கள் 1  சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளனர். அருணாச்சல், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்கள் இரண்டாவது பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இம்மாநிலங்களில், 3,161 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அங்கு 72 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டியது அவசியம்.


அசாம், சட்டீஸ்கர், ஜம்மு - காஷ்மீர், ஜார்க்கண்ட், ஒரிசா, உ.பி., மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலேயே பெரும் பிரச்னை காணப்படுகிறது. இம்மாநிலங்களில், மொத்தம் 9.73 லட்சம் புதிய ஆசிரியர்கள் நியமிக்க வேண்டியது அவசியம். இங்குள்ள 6.06 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us