தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளியால் பெருமை: ரசூல் பூக்குட்டி பெருமிதம்

அரசு பள்ளியால் பெருமை: ரசூல் பூக்குட்டி பெருமிதம்

அரசு பள்ளியால் பெருமை: ரசூல் பூக்குட்டி பெருமிதம்


UPDATED : ஜூன் 19, 2023 12:00 AM

ADDED : ஜூன் 19, 2023 04:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 19, 2023 12:00 AM ADDED : ஜூன் 19, 2023 04:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கேரள மாநிலம், பாலக்காடு பண்டிட் மோதிலால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளி குழந்தைகளின் நலன் மற்றும் மேம்பாட்டுக்கான, தொண்டு நிறுவனமான சில்ட்ரன்ஸ் ரீ யுனைடெட் பவுண்டேஷன் சார்பில் மண்டபம் கட்டப்பட்டது. நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. புதிய கல்வி ஆண்டில் 5 முதல் 10ம் வகுப்பு வரையிலான சிறுமிகளில் கேள்ர்ஸ் ஆன் தி வீல் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 120 பேருக்கு இலவச சைக்கிள் வினியோகம் செய்யப்பட்டது.விழாவில் பிரபல திரைப்பட ஒலி பொறியாளர் ரசூல் பூக்குட்டி கலந்து கொண்டு பேசியதாவது:
நானும் அரசு பள்ளியில் படித்து இந்நிலைக்கு வந்துள்ளேன். அரசு பள்ளியில் படித்ததால் பெருமையடைந்தேன். அரசு பள்ளியில் படித்து உயர்ந்து வருவோரிடம் மனிதாபிமானம் மற்றும் சமூக அக்கறையும் இருக்கும். நம் நாட்டின் ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் நட்பினை வலிமைப்படுத்தும் நல்ல மனிதராய் வளர அரசு பள்ளி கல்வியால் மட்டுமே சாத்தியம்.இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us