தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களின் புத்தக பை: கல்வி துறை உத்தரவு

மாணவர்களின் புத்தக பை: கல்வி துறை உத்தரவு

மாணவர்களின் புத்தக பை: கல்வி துறை உத்தரவு


UPDATED : ஜூன் 23, 2023 12:00 AM

ADDED : ஜூன் 23, 2023 04:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 23, 2023 12:00 AM ADDED : ஜூன் 23, 2023 04:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
பள்ளிகளில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்கள், 1.5 முதல் 5 கிலோ வரை எடை அடங்கிய பாடப் புத்தக பைகளை சுமந்து வர வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறை சுற்றிக்கை அனுப்பி உள்ளது.பெங்களூரைச் சேர்ந்த ரமேஷ் நாயக் என்பவர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில் பள்ளி குழந்தைகளுக்கான புத்தக பைகளின் எடை வரம்பு ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று 2020ல் மத்திய அரசு பிறப்பித்த விதி பின்பற்றப்படவில்லை. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி எடை அதிகம் உள்ள பைகள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. எனவே அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 21ன் கீழ் அரசுக்கு தெளிவான வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.இம்மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி, இந்த விவகாரம் தீவிரமானது. மனுதாரரோ இ - மெயில் மூலம் அதிகாரிகளிடம் கோரிக்கை அளித்ததை தவிர வேறு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவர் தனிப்பட்ட முறையில் பள்ளிக்கு சென்று பிரச்னை ஆய்வு செய்ததற்கான ஆதாரமும் இல்லை. தேவையான தகவல்களை சேகரித்து நீதிமன்றத்திற்கு வந்திருக்கலாம். எனவே இம்மனுவை தள்ளுபடி செய்து ஆதாரங்களுடன் புதிய விண்ணப்பத்தை தாக்கல் செய்யுங்கள் என உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவித்தல் துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
மாநில கல்வி இயக்குனரகம், குழந்தைகள் மற்றும் சட்ட ஆராய்ச்சி பயிற்சி மையம், இந்திய சட்டப்பள்ளி பல்கலைக்கழகம் பரிந்துரைப்படி பள்ளி மாணவர்களின் எடையில் 15 சதவீதத்துக்கு மேல் பள்ளிப் புத்தக பையின் எடை இருக்க கூடாது. பள்ளி பையை அளவுக்கு அதிகமாக சுமந்து செல்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து பெற்றோர், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இதன்படி 1 முதல் 2ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 1.5 முதல் 2 கிலோ வரையும், 3 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு 2 முதல் 3 கிலோ வரையும், 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 முதல் 4 கிலோ வரையும், 9 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 4 முதல் 5 கிலோ வரையும் புத்தக பையின் எடை இருக்க வேண்டும். இத்துடன், 200 பக்கங்களுக்கு மிகாமல் நோட்டு புத்தகங்கள் பயன்படுத்த வேண்டும். வீதிகளை மீறும் ஆசிரியர்கள், பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us