தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை: அங்கீகாரம் கிடைத்தது

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை: அங்கீகாரம் கிடைத்தது

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை: அங்கீகாரம் கிடைத்தது


UPDATED : ஜூன் 24, 2023 12:00 AM

ADDED : ஜூன் 24, 2023 05:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 24, 2023 12:00 AM ADDED : ஜூன் 24, 2023 05:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரி அரசு மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு தேசிய மருத்துவ ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 180 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. நீட் தேர்வின் மூலம் சேரும் மாணவர்களுக்கு இலவசமாக மருத்துவக் கல்வி அளிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஆய்வு நடத்திய தேசிய மருத்துவ கவுன்சில் குழு, கண்காணிப்பு கேமரா வைக்கப்படாததால், புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மாணவர் சேர்க்கை அனுமதியை மே 15ம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது.அதை தொடர்ந்துடில்லி சென்ற முதல்வர் ரங்கசாமி மத்திய அமைச்சர்களை சந்தித்து புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கு அங்கீகாரம் தர வேண்டும் என்று வலியுறுத்தினார். கவர்னர் தமிழிசையும் மத்திய அமைச்சர்களை தொடர்பு கொண்டு பேசினார். அதை தொடர்ந்து, கடந்த 8ம் தேதி, தேசிய மருத்துவ ஆணைய முதல் மேல்முறையீட்டுஅதிகாரிகள், வீடியோ கான்பரன்ஸ் மூலம் குறைகள் சரி செய்யப்பட்டதா என புதுச்சேரி அரசு மருத்துவ கல்லுாரி டீனிடம் விசாரணை நடத்தினர். அப்போது கல்லுாரி தரப்பில், 25 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் முடிந்து விட்டது. ஏற்கனவே பயோ மெட்ரிக் பழுதுகளும் சரி செய்யப்பட்டு விட்டன. இன்னும் ஒரு வாரத்திற்குள் இவை முழுமையாக பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டது.இதனை ஏற்ற, தேசிய மருத்துவ ஆணையத்தின் முதல் மேல்முறையீட்டு குழு, புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லுாரிக்கு 150 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு ஐந்தாண்டு காலத்திற்கு அங்கீகாரம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 2017ம் ஆண்டு மருத்துவக் கல்வி பயின்று, தற்போது பயிற்சி பெற்று வரும் மருத்துவ மாணவர்களுக்கும், முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கும் சிக்கல் தீர்ந்தது.எத்தனை சீட்:
 அரசு மருத்துவக் கல்லுாரியில் 180 எம்.பி.பி.எஸ்., சீட்டுகள் உள்ளன. ஆனால் தேசிய மருத்துவ ஆணையம் 150 சீட்டுகளுக்கு மட்டும் அங்கீகாரம் கொடுத்துள்ளது. அப்படியென்றால் 30 எம்.பி.பி.எஸ்., சீட்டுகளுக்கு அனுமதி இல்லையா என்ற குழப்பமும் ஏற்பட்டது.இது குறித்து அரசு மருத்துவ கல்லுாரி அதிகாரிகள் கூறும்போது, தேசிய மருத்துவ ஆணையம் அங்கீகாரம் கொடுக்கும்போது, 150 எம்.பி.பி.எஸ்., சீட்டுகள் என்றே அங்கீகாரம் கொடுக்கும். பொருளாதார பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 30 சீட்டுகளும் சேர்த்து கொள்ளப்படும். எனவே இந்தாண்டு 180 எம்.பி.பி.எஸ்., சீட்டுகளுக்கு தான் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடக்கும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us