தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘சர்வதேச வாய்ப்புகளை இந்திய உயிரி தொழில்நுட்பம் பெறும்’

‘சர்வதேச வாய்ப்புகளை இந்திய உயிரி தொழில்நுட்பம் பெறும்’

‘சர்வதேச வாய்ப்புகளை இந்திய உயிரி தொழில்நுட்பம் பெறும்’


UPDATED : ஜன 02, 2010 12:00 AM

ADDED : ஜன 02, 2010 05:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 02, 2010 12:00 AM ADDED : ஜன 02, 2010 05:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை உயிரி தொழில்நுட்பத் துறை சார்பில், ‘உயிரி தொழில்நுட்பம் - மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலின் இணைப்பு’ என்ற தலைப்பில் மூன்று நாள் கருத்தரங்கு ஜன. 2ம் தேதி துவங்கியது.


பேராசிரியர் கிருஷ்ணசாமி வரவேற்றார். மத்திய சுகாதார ஆராய்ச்சித் துறை செயலாளர் வி.எம்.கடோச் பேசுகையில், “இந்தியாவில் உள்ள ஆய்வகங்கள் வெளியிடும் மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் சிறப்பானதாக உள்ளன. ஆனால், அந்த முடிவுகளை வணிகரீதியாக பயன்படுத்தும்போதுதான் பின்தங்கி விடுகிறோம். தற்போது இத்துறை சுதந்திரமாக செயல்பட துவங்கியுள்ளதால், அனைத்து ஆய்வகங்களும் இணைந்து செயல்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதனால், மருத்துவம் உட்பட பலவேறு துறைகளில் பொருட்களை உருவாக்கி வணிகரீதியாகவும் வெற்றி காண முடியும். தொழில் முனைவோர், படைப்பாற்றல் உள்ளோர் இணைந்து பணியாற்றுவதனால், தயாரிக்கும் பொருட்களை உலகளவில் பயன்படுத்தச் செய்ய முடியும், என்றார்.


கருத்தரங்கிற்கு தலைமை வகித்த மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் ஆர்.கற்பககுமாரவேல் கூறியதாவது:
உயிரி தொழில்நுட்பத்தில் எதிர்கால தேவை என்ன, அவற்றை பூர்த்தி செய்வது எப்படி என்பது குறித்து உள்நாட்டு, வெளிநாட்டு அறிஞர்கள் இக்கருத்தரங்கில் கட்டுரைகள் சமர்ப்பிக்க உள்ளனர். 2010ம் ஆண்டு, மதுரை காமராஜ் பல்கலைக்கு பல முக்கிய நிகழ்வு கொண்டதாக இருக்கும். 25 ஆண்டுகளாக தீர்வுகாணப்படாத பிரச்னை, சட்டரீதியாக தீர்வு காணப்பட்டு, 103 பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.


சர்வதேச கருத்தரங்கு நடத்தும் அளவு வசதியுடன், பழைய மாணவர் சங்கம் சார்பில் 10 கோடி ரூபாயில், நவீன ஆடிட்டோரியம் கட்டப்பட உள்ளது. பல்கலையில் ஆய்வாளர்களை ஊக்குவிக்க, ஊக்கத் தொகை வழங்க, சிண்டிகேட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக எனது தலைமையில், பல பல்கலைகளின் அறிஞர்களைக் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. பதினோராவது ஐந்தாண்டு திட்ட நிதியாக, 12.5 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் நன்கு படிப்பதற்கான சூழ்நிலை ஏற்படுத்தப்படும். இவ்வாறு துணைவேந்தர் கூறினார்.


பேராசிரியர்கள் தர்மலிங்கம், வேலுத்தம்பி, குப்தா மற்றும் பல்வேறு துறை பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us