தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசின் உதவித் தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு

அரசின் உதவித் தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு

அரசின் உதவித் தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு


UPDATED : ஜூன் 28, 2023 12:00 AM

ADDED : ஜூன் 28, 2023 04:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 28, 2023 12:00 AM ADDED : ஜூன் 28, 2023 04:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்:
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசு உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வரும் 1ம் தேதி துவங்கும் காலாண்டிற்கு, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினை தொடர்ந்து புதுப்பித்து வரும் 30ம் தேதியுடன் 5 ஆண்டு நிறைவடைந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தைச் சேர்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும்.விண்ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். மேலும், https://employmentexange.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெற்றவர்கள் மீள விண்ணப்பிக்க தகுதியற்றவர்களாவர். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்களின் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us