UPDATED : ஜூலை 01, 2023 12:00 AM
ADDED : ஜூலை 01, 2023 03:32 PM
சென்னை:
சீனாவின், செங்டுவில் பகுதியில் 31வது உலக பல்கலை விளையாட்டு போட்டிகள் ஜூலை 28ல் துவங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடக்கிறது.இப்போட்டிக்கு பல நாடுகளில் இருந்து, வீரர் - வீராங்கனையர் தேர்வாகி வருகின்றனர். முன்னதாக அகில இந்திய பல்கலையில் முதல் மூன்று இடங்களை பிடித்த வீரர், வீராங்கனையர் பெங்களூரில் கடந்த மாதம் நடந்த உலக பல்கலை போட்டிக்கான தேர்வில் பங்கேற்றனர். இந்நிலையில் சீனாவில் நடக்கவுள்ள உலக போட்டியில் பங்கேற்க உள்ளோரின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் சென்னை எம்.ஓ.பி., வைஷ்ணவ் மகளிர் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு பி.பி.ஏ., பயிலும் அனன்யா என்ற மாணவி, லான் டென்னிஸ் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். மாணவியை பாராட்டிய கல்லுாரி முதல்வர் அர்ச்சனா பிரசாத், போட்டியில் பங்கேற்பதற்காக 93,600 ரூபாய்க்கான காசோலையை, அவரிடம் நேற்று வழங்கினார்.
