இன்று பல்கலை பட்டமளிப்பு விழா: பொன்முடி பங்கேற்பில்லை
இன்று பல்கலை பட்டமளிப்பு விழா: பொன்முடி பங்கேற்பில்லை
UPDATED : ஜூலை 18, 2023 12:00 AM
ADDED : ஜூலை 18, 2023 11:29 AM
சென்னை:
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா இன்று(ஜூலை 18) நடக்க உள்ள நிலையில், பல்கலையின் இணை வேந்தர், உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, இதில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின், 29வது பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில் இன்று காலை, 10:30 மணிக்கு நடக்கிறது. தமிழக கவர்னர் ரவி தலைமையேற்று, பட்டம் அளிக்க உள்ளார். விழாவில் முதன்மை விருந்தினராக, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழுவின் தலைவர், பிபெக் டெப்ராய் பங்கேற்கிறார். சிறப்பு விருந்தினராக உயர்கல்வித்துறை அமைச்சரும், பல்கலையின் இணை வேந்தருமான பொன்முடி பங்கேற்பதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சர் பொன்முடியின் வீட்டில், நேற்று அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி, அவரை இரவில் அமலாக்கத்துறை அலுவலகம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதன் காரணமாக, இன்றைய பட்டமளிப்பு விழாவில், அமைச்சர் பொன்முடி பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், பட்டமளிப்பு விழா திட்டமிட்டப்படி நடக்கும் என பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.
