தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதிதாக கற்றல் மையம் திறப்பு மாணவர்களுக்கு அறிவுரை

புதிதாக கற்றல் மையம் திறப்பு மாணவர்களுக்கு அறிவுரை

புதிதாக கற்றல் மையம் திறப்பு மாணவர்களுக்கு அறிவுரை


UPDATED : ஜூலை 31, 2023 12:00 AM

ADDED : ஜூலை 31, 2023 06:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 31, 2023 12:00 AM ADDED : ஜூலை 31, 2023 06:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து, கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதிகளுக்கு, 50,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள், மறுகுடியமர்வு செய்யப்பட்டு உள்ளன.இவர்களுக்கு கல்வி வழங்குவதில், அரசு மற்றும் தனியார் அமைப்புகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றன. அந்த வகையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், முதல் தலைமுறை அறக்கட்டளை சார்பில், கண்ணகி நகரில் கற்றல் மையம் துவங்கப்பட்டது. இதில், 220க்கும் மேற்பட்ட முதல் தலைமுறை பட்டதாரிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், பெரும்பாக்கத்தில் கட்டப்பட்ட கற்றல் மையத்தை, முன்னாள் தலைமை செயலர் இறையன்பு, நேற்று திறந்து வைத்தார். பின், கண்ணகி நகரில் முதல் தலைமுறை பட்டதாரிகளுடன் கலந்துரையாடினார்.இதில், இறையன்பு பேசியதாவது:
வாழ்க்கையை அர்த்தமுடையதாக மாற்ற, படிப்பு மிக முக்கியம். கண்ணகி நகரில் இரண்டு, மூன்று ஆண்டுகளில் முதல் தலைமுறை பட்டதாரிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கண்ணகி நகர், கல்வி நகராக மாறுகிறது. அனைத்து வீடுகளிலும், பட்டதாரிகள் உருவாக வேண்டும். முதுநிலை பட்டப்படிப்பு படிக்க தேவையான ஆலோசனை, உதவிகள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் சங்கர் பேசுகையில், படிப்பு இருந்தால், சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். வாழ்க்கை தரமும் உயரும். அனைத்து வீடுகளிலும், படிக்காதவர்கள் இல்லை என்ற நிலை உருவாக வேண்டும். இதற்கு, முதல் தலைமுறை அறக்கட்டளை முக்கிய பங்காற்றும், என்றார். கற்றல் மையத்தில், டியூசன் சென்டர், போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி, ஓட்டுனர், தையல் பயிற்சி, சிலம்பம், யோகா உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us