தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போஜ்பத்ரா இலைகளில் கலைநயம் பெண்களுக்கு பிரதமர் பாராட்டு

போஜ்பத்ரா இலைகளில் கலைநயம் பெண்களுக்கு பிரதமர் பாராட்டு

போஜ்பத்ரா இலைகளில் கலைநயம் பெண்களுக்கு பிரதமர் பாராட்டு


UPDATED : ஆக 02, 2023 12:00 AM

ADDED : ஆக 02, 2023 09:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 02, 2023 12:00 AM ADDED : ஆக 02, 2023 09:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டேராடூன்:
போஜ்பத்ரா எனப்படும் புரசு இலைகளில் கலைநயத்தை உருவாக்கும் உத்தரகண்ட் பெண்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி, மன் கீ பாத் எனப்படும் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி வாயிலாக மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.கலை, அறிவியல், தகவல் தொழில்நுட்பம் என பல்வேறு தலைப்புகளில் உரையாற்றும் பிரதமர், தன்னைக் கவர்ந்த நாட்டு மக்களில் ஒரு சிலரை பற்றியும் அந்த நிகழ்ச்சியில் பேசி வருகிறார். இந்த வகையில், உத்தரகண்ட் மாநிலத்தில், மணா பள்ளத்தாக்கில் வாழும் பெண்கள் குறித்து பேசியுள்ள பிரதமர், அவர்கள் புரசு இலைகளை பயன்படுத்தி வண்ணமயமான கலைநயமிக்க பொருட்களை உருவாக்கி வருவதாக குறிப்பிட்டுள்ளதுடன், அதற்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.இது குறித்து பிரதமர் மோடி கூறியதாவது:
உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள மணா பள்ளத்தாக்கைச் சேர்ந்த பெண்கள், நம் கலாசார அடையாளமான புரசு இலைகளில் அருமையான கலைபடைப்பை உருவாக்கி வருகின்றனர். பண்டைய காலம் தொட்டே சாஸ்திரங்கள், புனித நுால்கள் புரசு இலைகளில் தான் எழுதப்பட்டு வந்தன. மகாபாரதமுமே கூட புரசு இலைகளில் தான் எழுதப்பட்டது. புரசு இலையின் இந்த பாரம்பரியம், உத்தரகண்ட் பெண்களின் வாழ்க்கையில், புதிய வண்ணங்களை நிரப்பிஉள்ளது.மாநில அரசு புரசு மரத்தின் அரிய வகைகளைப் பாதுகாக்க ஒரு இயக்கத்தைத் துவங்கி இருக்கிறது. நாட்டின் எந்தப் பகுதிகள் தேசத்தின் கடைகோடி என பார்க்கப்பட்டதோ, அவை இப்போது தேசத்தின் முதன்மை கிராமங்களாக வளர்ச்சிப் பயணத்தில் முன்னேறி வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us