தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அழகப்பா பல்கலை., மாணவர்களுக்கு சிறப்பு துணை தேர்வு

அழகப்பா பல்கலை., மாணவர்களுக்கு சிறப்பு துணை தேர்வு

அழகப்பா பல்கலை., மாணவர்களுக்கு சிறப்பு துணை தேர்வு


UPDATED : ஆக 17, 2023 12:00 AM

ADDED : ஆக 17, 2023 01:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 17, 2023 12:00 AM ADDED : ஆக 17, 2023 01:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி:
காரைக்குடி அழகப்பா பல்கலை., இணைப்பு கல்லுாரிகளில் ஏப்.2023ம் ஆண்டு நடந்த இறுதி பருவமுறை தேர்வுகளில் 2 பாடங்களில் மட்டும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, சிறப்பு துணைத் தேர்வு செப். 2023 முதல் வாரத்தில் அந்தந்த கல்லுாரிகளில் நடைபெற உள்ளது.இதற்கான விண்ணப்பத்தை www.alagappauniversity.ac.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தாள் ஒன்றுக்கு ரூ. ஆயிரம் வங்கி வரைவோலையை, பதிவாளர், அழகப்பா பல்கலை., காரைக்குடி என்ற பெயரில் ஆக. 23ம் தேதிக்குள் அழகப்பா பல்கலை., தேர்வு பிரிவுக்கு அனுப்ப வேண்டும்.ஏப். 2023 ல் நடந்த தேர்வுகளுக்கான மறு மதிப்பீட்டு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. இணைப்பு கல்லூரிகளுக்கான 2023ல் நடந்த மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து சிறப்பு தகுதி பெறும் மாணவர்கள் இச்சிறப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மறு மதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியான 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். துணை தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் நுழைவு சீட்டினை அந்தந்த கல்லூரிகளில் பெற்றுக் கொள்ளலாம். என தேர்வாணையர் கண்ணபிரான் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us