தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/படிக்கும் மையங்கள்!: கலை பண்பாட்டுத் துறை தீவிரம்

படிக்கும் மையங்கள்!: கலை பண்பாட்டுத் துறை தீவிரம்

படிக்கும் மையங்கள்!: கலை பண்பாட்டுத் துறை தீவிரம்


UPDATED : ஜன 13, 2010 12:00 AM

ADDED : ஜன 13, 2010 05:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 13, 2010 12:00 AM ADDED : ஜன 13, 2010 05:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத் துறை, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் நூலகங்களை நடத்தி வருகிறது.

இதன் மூலம் மக்களிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறது.


மாநிலத்தின் மிகப் பெரியதும், பழமைவாய்ந்ததுமான ரோமன் ரோலன்ட் நூலகம் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.இங்கு, மிக அரிய புத்தகங்கள் உட்பட 4 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்த துறையின் கீழ் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாமில் 77 கிளை நூலகங்கள், 4 பொது நூலகங்கள் என மொத்தம் 81 நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. பெரும்பாலான நூலகங்களில் நூலகர் பணியிடங்களும், ஊழியர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளன. நூலகர் பணியிடங்களை நிரப்புவதற்காக நியமன விதிகள் உருவாக்கப்பட்டு, டில்லிக்கு அனுப்பப்பட்டுள்ளதால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் நிதி நெருக்கடியிலும் கலை பண்பாட்டுத் துறை சிக்கித் தவிக்கிறது.

எனவே, நூலகங்களுக்கு பதிலாக படிக்கும் மையங்களை உருவாக்குவதில் கலை பண்பாட்டுத் துறை தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறது. முறையாக பதிவு செய்யப் பட்டு நல்ல முறையில் செயல்படும் இளைஞர் மன்றங்கள், மகளிர் அமைப்புகள், தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் இலவசமாக இடம் அளிக்க முன் வந்தால், அங்கு படிக்கும் மையத்தை கலை பண்பாட்டுத் துறை ஆரம்பிக்கும் என்பது குறிப்பிடத் தக்கது. படிக்கும் மையத்துக்கு தேவையான நாளிதழ்கள், வார, மாத இதழ்களும் அனுப்பி வைக்கப்படும்.

இதுகுறித்து கலை பண்பாட் டுத் துறையின் இயக்குனர் பானுமதி கூறும்போது, ஏற்கெனவே 16 இடங்களில் படிக்கும் மையங்கள் செயல்பட்டு வருகிறது. பொது மக்கள் நலன் கருதி தற்போது கூடுதலான இடங்களில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். தகுதியுள்ளவர்கள் அணுகினால் அனுமதி வழங்கப்படும் என்றார்.
 
படிக்கும் மையம் ஆரம்பிக்கத் தகுதியான இடங்களை தேர்வு செய்து பரிந்துரை செய்வதற்காக ஏற்கெனவே அமைக்கப்பட்ட குழுக்கள், தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, கலை பண்பாட்டுத் துறை இயக்குனர் தலைமையிலான குழுவில் துணை இயக்குனர் (முதியோர் கல்வி), முதன்மை கல்வி அலுவலர், அரியாங்குப்பம், வில்லியனூர், உழவர்கரை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உறுப்பினர்களாக இருப் பர்.குழுவின் உறுப்பினர் செயலராக, உதவி நூலக தகவல் அதிகாரி செயல்படுவார். இதுமட்டுமல்லாமல் காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளிலும் படிக்கும் மையங்கள் ஆரம்பிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us