தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஐ.டி., மாணவர்கள் உருவாக்கிய தானியங்கி படகுக்கு பரிசு

ஐ.ஐ.டி., மாணவர்கள் உருவாக்கிய தானியங்கி படகுக்கு பரிசு

ஐ.ஐ.டி., மாணவர்கள் உருவாக்கிய தானியங்கி படகுக்கு பரிசு


UPDATED : ஆக 30, 2023 12:00 AM

ADDED : ஆக 30, 2023 09:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 30, 2023 12:00 AM ADDED : ஆக 30, 2023 09:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி., வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
நார்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலையின் சார்பில், சர்வதேச அறிவியல் தொழில்நுட்ப போட்டி, சமீபத்தில், நார்வேயில் நடந்தது. இதில், அமெரிக்காவின் உயர்கல்வி பட்டியலில் முன்னணியில் உள்ள எம்.ஐ.டி., உள்பட பல்வேறு நாட்டு உயர்கல்வி நிறுவன மாணவர்கள் பங்கேற்றனர்.சென்னை ஐ.ஐ.டி.,யின் சார்பில், அரித்ரா குழுவினர் பங்கேற்று, தங்களது தானியங்கி படகு உருவாக்கத்தை, செயல்முறை பயிற்சியில் விளக்கினர். இந்த படகுக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது. கடல் பொறியியல் துறை பேராசிரியர்கள், அபிலாஷ் சர்மா, ஆத்மானந்த், இந்த துறையின் ஆய்வக மாணவர்கள் முஹமது இப்ராஹிம், அமர்நாத் சிங், ஆகாஷ் விஜயகுமார் மற்றும் ரக் ஷின் ரமேஷ் ஆகியோர், தானியங்கி படகு உருவாக்க குழுவில் இடம் பெற்றனர்.பரிசு பெற்ற மாணவர் குழுவை சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். மாணவர்கள் கண்டுபிடித்த தானியங்கி படகு, சூரிய சக்தியில் இயங்கும் தகடுகளை கொண்டுள்ளது. கடலின் மேற்பரப்பு வெப்பநிலை, வானிலை மாற்றம், துறைமுக ரோந்து, கண்காணிப்பு போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us