புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் புத்தகம் வழங்கல்
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் புத்தகம் வழங்கல்
UPDATED : செப் 03, 2023 12:00 AM
ADDED : செப் 03, 2023 06:04 PM
நாமக்கல்:
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், நாமக்கல் பகுதியில் பயனாளிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டம் முழுவதும், 15 வட்டார வள மையங்களில், 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாத, 15,290 பேர் பயன்பெறும் வகையில், 876 மையங்கள் நேற்று துவங்கப்பட்டன. நாமக்கல் அடுத்த கூச்சிக்கல்புதுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி மையத்தை துவங்கி வைத்து பேசினார். தொடர்ந்து, பயனாளிகளுக்கு புத்தகங்களை வழங்கினார்.நாமக்கல் வட்டார கல்வி அலுவலர்கள் புஷ்பராஜ், சந்திரவதனா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுமதி, தலைமையாசிரியர் செல்வராணி, மைய தன்னார்வலர் தாஹிரா பானு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
