UPDATED : செப் 05, 2023 12:00 AM
ADDED : செப் 05, 2023 09:46 AM
அ நிறம் | அளவு
கோவை:
மத்திய சிறையில் கைதிகளுக்கு, அமைதி கல்வி வகுப்பு நடைபெற்றது.சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை டி.ஜி.பி., அமரேஷ் பூஜாரி ஆணையின்படி, சிறை கைதிகளுக்கான, 10 நாள் அமைதி கல்வி வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, கோவை டி.ஐ.ஜி., சண்முகசுந்தரம் வழிகாட்டுதலின் படி, மத்திய சிறை ஸ்.பி., ஊர்மிளா தலைமையில் அமைதி கல்வி வகுப்பு, கோவை மத்திய சிறையில் துவங்கப்பட்டது. இந்த வகுப்பில், தனியார் அமைப்பின் தலைவர் பிரேம் ராவத் மன அமைதி பற்றி பேசிய காணொலி காட்சி, சிறை கைதிகள் மத்தியில் தினந்தோறும் காலை, 7:30 முதல், 8:30 மணி வரை ஒளிபரப்பப்பட உள்ளது.
