தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திருச்செங்கோட்டில் அரசு கலை கல்லூரி அமைக்க கோரிக்கை

திருச்செங்கோட்டில் அரசு கலை கல்லூரி அமைக்க கோரிக்கை

திருச்செங்கோட்டில் அரசு கலை கல்லூரி அமைக்க கோரிக்கை


UPDATED : ஜன 17, 2010 12:00 AM

ADDED : ஜன 17, 2010 11:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 17, 2010 12:00 AM ADDED : ஜன 17, 2010 11:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுகுறித்து கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளர் ஜெயச்சந்திரன், தமிழக முதல்வருக்கு மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்டம் நான்கு தாலுகா மற்றும் 15 யூனியன்களை உள்ளடக்கி உள்ளது. மகளிருக்கான ஒரு கல்லூரி, ஆண், பண்கள் பயிலும் வகையில் ஒரு கல்லூரி என இரண்டு கல்லூரிகளும், அதேபோல் ராசிபுரம் தாலுகாவில் இருபாலரும் படிக்கும் அரசு கல்லூரியும் செயல்பட்டு வருகின்றன. மேலும், ப.வேலூர் தாலுகாவில் அரசு உதவி பெறும் இருபாலர் படிக்கும் கல்லூரி ஒன்று என நான்கு அரசு கல்லூரிகள் மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன.

நாமக்கல்லில் மிகப்பெரிய தாலுகாவான திருச்செங்கோட்டில் அரசு கல்லூரி துவக்கப்படவில்லை. அதனால், மேல்நிலைப்படிப்பு முடித்து கல்லூரியில் படிக்க விரும்பும் அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவ, மாணவியர், ஈரோடு, சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி அல்லது நாமக்கல், ராசிபுரம், ப.வேலூர் தாலுகாவில் உள்ள கல்லூரிகளுக்கு சென்று உயர் கல்வி படிக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

திருச்செங்கோட்டில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் ஏழை விவசாய கூலி, பனை மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள், லாரி தொழிற்கூடங்கள் என இதர கூலி வேலைகளை செய்யும் தொழிலாளர்களின் குழந்தைகள்.

அவர்கள் அதிகம் செலவு செய்து தனியார் கல்லூரியில் படிக்க முடியாதவர்கள். பணம் இல்லாத காரணத்தால் அவர்களுக்கு உயர்கல்வி மறுக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழக அரசு, பணம் இல்லாத காரணத்தால் கல்வி பெறமுடியாமல் கண்ணீர் வடிக்கும் ஏழை மாணவ, மாணவியருக்கு அரசு கலை அறிவியல் கல்லூரி திருச்செங்கோட்டில் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us