தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொருளாதார மந்தநிலையால் அடிப்படை கல்வி கடும் பாதிப்பு!

பொருளாதார மந்தநிலையால் அடிப்படை கல்வி கடும் பாதிப்பு!

பொருளாதார மந்தநிலையால் அடிப்படை கல்வி கடும் பாதிப்பு!


UPDATED : ஜன 20, 2010 12:00 AM

ADDED : ஜன 20, 2010 04:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 20, 2010 12:00 AM ADDED : ஜன 20, 2010 04:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொருளாதார மந்தநிலையை கட்டுப்படுத்துவதில் பணக்கார நாடுகள் முக்கியத்துவம் அளித்து அதிக நிதியை ஒதுக்கின. அவை அடிப்படை கல்வியை கண்டுகொள்ளவில்லை என யுனெஸ்கோ அறிக்கை தெரிவிக்கிறது.


இதுகுறித்து அந்த அறிக்கையின் ஆசிரியர் கெவின் வாட்கின்ஸ் கூறுகையில், “பொருளாதார மந்தநிலையால், 2015 ஆண்டில் அடிப்படை கல்வியில் மேம்பாடு அடைய வேண்டும் என்ற நூற்றாண்டு குறிக்கோளை நடைமுறைப்படுத்துவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பள்ளி இடைநின்ற பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 54 சதவீதமாக உள்ளது. குறிக்கோளை எட்ட இன்னும் 5 ஆண்டுகளே உள்ள நிலையில், ஆண் - பெண் பாகுபாடு போன்ற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஆனால், குழந்தைகளுக்கான அடிப்படை கல்விக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை உலக பொருளாதார மந்தநிலை தட்டிச் சென்றுள்ளது.


கல்வி முன்னேற்றத்திற்காக சர்வதேச அளவில் நன்கொடையாளர்கள் வழங்கும் நிதியும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் ஏழை நாடுகள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி உள்ளது. ஏழைக் குடும்பத்தில் பிறந்த குழந்தைகள், குழந்தை தொழிலாளர்கள், சேரிகளில் வாழும் குழந்தைகள் ஆகியோரது வாழ்க்கையை மாற்ற வேண்டும். இந்த நிலையை மாற்றி கல்வி முன்னேற்றத்திற்கு நிதி வழங்க கேட்டுக்கொண்டுள்ளோம்” என்றார்.


நன்கொடை வழங்கும் நாடுகள் உடனடியாக முன்வந்து நிதி உதவி வழங்க வேண்டியது அவசியம், என்று ஐ.நா. பொது செயலர் பான் கி-மூன் அழைப்பு விடுத்துள்ளார்.


வறுமை ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி, குழந்தை வாழ்வு, ஜனநாயகம் ஆகியவற்றிற்காக 2015ம் ஆண்டிற்கான குறிக்கோளை அடைய அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். சில அரசாங்கங்கள் தரமான கல்வியை வழங்குகிறது, ஆனால் ஏழை மற்றும் சமுதாயத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு வழங்குவதில் தோல்வியடைந்துள்ளன. இந்த ஏற்றத்தாழ்வை நாம் மாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us