தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிவில் சர்வீசஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு

சிவில் சர்வீசஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு

சிவில் சர்வீசஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு


UPDATED : ஜன 22, 2010 12:00 AM

ADDED : ஜன 22, 2010 12:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 22, 2010 12:00 AM ADDED : ஜன 22, 2010 12:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: அகில இந்திய அளவில், ஐ.ஏ.எஸ்., பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு, யு.பி.எஸ்.சி., பணியிடங்களை ஒதுக்கியுள்ளது.


அகில இந்திய அளவில் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., பதவிகளுக்கு தேர்வானவர்கள் முசோரியில் பயிற்சி முடித்துள்ளனர். அவர் களுக்கு நாடு முழுவதும் பல மாநிலங்களில் பணியாற்ற பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை சைதை துரைசாமி மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., இலவச பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த, ஆறு பேர் ஐ.ஏ.எஸ்., பதவிக்கு தகுதி பெற்றிருந்தனர். அவர்களும் நேற்று பணியிட ஒதுக்கீடு பெற்றனர்.


அகில இந்திய அளவில் 22வது இடத்தில், தேர்ச்சி பெற்ற துõத்துக்குடியைச் சேர்ந்த, அருண் சுந்தர் தயாளனுக்கு தமிழகத்திலேயே பணி ஒதுக்கப்பட் டுள்ளது. 102வது இடம் பெற்ற, ஈரோட்டைச் சேர்ந்த, பிரவீனாவிற்கு குஜராத்தில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற ரவிசங்கருக்கு உத்தரகண்டிலும், ஈரோட்டைச் சேர்ந்த இளைய ராஜாவிற்கு மத்திய பிரதேசத்திலும்,  திருநெல் வேலியைச் சேர்ந்த சுப்புலட்சுமிக்கு அசாமிலும், திருச்சியைச் சேர்ந்த நாகராஜனுக்கு குஜராத்திலும் பணியிடங்கள் ஒதுக்கப்பட் டுள்ளன.


இவர்களில், விவசாய குடும்பத்தில் பிறந்து, கால் நடை மருத்துவத்தில் பட்டப் படிப்பு முடித்த இளையராஜா, ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதிய முதல் முறையே வெற்றி பெற்றுள்ளார். திருநெல்வேலியைச் சேர்ந்த சுப்புலட்சுமி ஏற்கனவே தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குருப் - 1 தேர்வில் வெற்றி பெற்று துணை ஆட்சியராக பதவி பெற்றுள்ளதால், ஐ.ஏ.எஸ்., பணிக்கு செல்லவில்லை என்று தெரிவித்துள்ளார். இத்தகவலை, மனித நேயம் பயிற்சி மையத்தின் இயக்குனர் வாவூசி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us