தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சர்வதேச கப்பல் நிறுவனத்தில் சேர அரிய வாய்ப்பு

சர்வதேச கப்பல் நிறுவனத்தில் சேர அரிய வாய்ப்பு

சர்வதேச கப்பல் நிறுவனத்தில் சேர அரிய வாய்ப்பு


UPDATED : ஜன 23, 2010 12:00 AM

ADDED : ஜன 23, 2010 01:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 23, 2010 12:00 AM ADDED : ஜன 23, 2010 01:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சர்வதேச அளவில் பிரசித்திப் பெற்ற கப்பல் நிறுவனத்தில், தமிழர்கள் பெரும்பான்மையான அளவு சேர, நல்லதொரு வாய்ப்பாக சீ டீம் மேனேஜ்மென்ட் இந்தியா நிறுவன தலைமை அலுவலகம் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது.

உலக அளவில், மிகப் பெரும் கப்பல்களில் பணியாற்ற, சிறந்த வல்லுனர்களை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. இதனால் சர்வதேச பிரசித்திப் பெற்ற நிறுவனங்கள் பலவும், இந்தியர்களை தங்கள் கப்பல்களில் பணி புரிவதற்காக, ஆள் எடுக்கப் போட்டியிட்டு வருகின்றன. தமிழகத்தில் சர்வதேச கப்பல் நிறுவனங்களின் தலைமை மேலாண்மை அலுவலகங்கள் இல்லாத நிலை இருந்து வந்தது. இந்த குறையை போக்கும் வகையில், பெர்முடா நாட்டின் கச்சா எண்ணை கப்பல்களை கொண்ட ப்ரண்ட் லைன் நிறுவனம், சென்னை நுங்கம்பாக்கம் காதர் நவாஸ்கான் சாலையில், புதிய அலுவலகத்தை திறந்துள்ளது.


இந்த தலைமை அலுவலகம் மூலம், தங்கள் கப்பல்களில் பணி புரியும் நபர்களை தேர்வு செய்ய, அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு சீ டீம் மேனேஜ்மென்ட் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் என்று பெயரிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் முதன்மை தலைமை அலுவலராக கேப்டன் ராமசாமி செயல்படுகிறார்.

கேப்டன் ராமசாமி, ஏற்கனவே பல்வேறு கப்பல்களில் 21 ஆண்டுகள் பணி புரிந்து கப்பல் நிறுவனம் ஒன்றில் 12 ஆண்டு தலைமை அதிகாரியாக பணிபுரிந்துள்ளார். அத்துடன், தமிழகத்தில் பிரசித்திப் பெற்ற ஆர்.எல்., இன்ஸ்டிடியூட் ஆப் மரைன் இன்ஜினியரிங் கல்லூரி ஆலோசனைக் குழு உறுப்பினராகவும், ஏ.எம்.இ.டி. பல்கலைக்கழக ஆலோசனைக் குழு உறுப்பினராகவும், வாலம் ஷிப்பிங் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பணி புரிந்துள்ளார். இவரது மேற்பார்வையில், மூன்று லட்சம் டன் கச்சா எண்ணெய்யை சுமந்து செல்லும் 80 கப்பல்களுக்கான ஆட்கள், தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒவ்வொரு கப்பல்களுக்கும் கேப்டன் முதல் மெஸ்மேன் வரை ஆண்டுக்கு 45 பேர் வரை தேர்வு செய்யப்பட உள்ளனர். முதல் மூன்று ஆண்டுகளுக்குள், 35 கப்பல்களுக்கான பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதன் மூலம் லட்சக்கணக்கான ரூபாய் ஊதியம் ஈட்டும் பணியில் ஏராளமான தமிழர்கள் பணி பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய அலுவலகம் திறப்பு விழாவில், ப்ரண்ட் லைன் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ஜேன்ஸ்மார்ட்டின் ஜென்சன், கேப்டன் ராமசாமி, கவுசல்யா ராமசாமி, பவுலின் சுமித், சீ டீம் மேனேஜ்மென்ட் சிங்கப்பூர் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் அலாசதிர் ஸ்மித், ப்ரண்ட் லைன் அதிகாரி ஒலவ் ஐக்ரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us