தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வாள் சண்டை வீராங்கனைக்கு போலீஸ் சார்பில் நிதியுதவி

வாள் சண்டை வீராங்கனைக்கு போலீஸ் சார்பில் நிதியுதவி

வாள் சண்டை வீராங்கனைக்கு போலீஸ் சார்பில் நிதியுதவி


UPDATED : ஜன 25, 2010 12:00 AM

ADDED : ஜன 25, 2010 10:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 25, 2010 12:00 AM ADDED : ஜன 25, 2010 10:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் லோகநாதனின் இரட்டைப் பிறவி மகள்களான லோகநாயகி, லோகேஸ்வரி ஆகிய இருவரும் சென்னையில், ஜானகி எம்.ஜி.ஆர்., கலைக் கல்லூரியில் பி.பி.ஏ,. இரண்டாமாண்டு படித்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வாள் சண்டைப் போட்டியில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என 100க்கும் மேற்பட்ட பதக்கங் களை பெற்றுள்ளனர்.வரும் பிப்ரவரி 1ம் தேதி புனேயில் நடந்த காமன்வெல்த் போட்டிகளுக்கான வீரர்கள் தேர்வு முகாமில், வாள் வீச்சு போட்டியில் தமிழகத்தின் சார்பாக, முதன் முறையாக லோகநாயகி தேர்வு பெற்றுள்ளார்.இவரது திறமையை ஊக்குவிக்கும் நோக்கில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் லோக நாயகியையும், லோகேஸ்வரியையும் அலுவல கத்திற்கு நேற்று வரவழைத்து பாராட்டினார். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பெல்லியப்பாவின் சார்பில், லோகநாயகிக்கு 30 ஆயிரம் ரூபாய் வெகுமதி வழங்கப்பட்டது.இந்தியா மற்றும் சர்வதேச போட்டிகளிலும் கலந்து கொண்டு பதக்கங்கள் பெறவேண்டும் என்றும் வாழ்த்தினர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us