தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதுநிலை மாணவர்களுக்கு மூன்று மாத பயிற்சி கட்டாயம்

முதுநிலை மாணவர்களுக்கு மூன்று மாத பயிற்சி கட்டாயம்

முதுநிலை மாணவர்களுக்கு மூன்று மாத பயிற்சி கட்டாயம்


UPDATED : அக் 27, 2023 12:00 AM

ADDED : அக் 28, 2023 07:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2023 12:00 AM ADDED : அக் 28, 2023 07:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை கீழ்ப்பாக்கத்தில், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கத்தின், லோகோவை, அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்டார். பின், அவர் கூறியதாவது:
மருத்துவ ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கம் செயல்பட்டு வருகிறது. பல்வேறு வகையான கடுமையான நோய்களில் இருந்து மக்களை காப்பது, வராமல் தடுப்பது போன்ற ஆராய்ச்சிகள், முன் தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்படும்.தமிழக டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள், தொற்று நோய் சிகிச்சையின் போது எதிர்கொள்ளும் பல சவால்களை அறிந்து, அதற்கான உரிய சிகிச்சைகளை வழங்க, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.முதுநிலை மருத்துவ மாணவர்கள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில், மூன்று மாதம் கட்டாயம் பயிற்சி பெற வேண்டும் என, தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள எந்தெந்த மாவட்ட மருத்துவமனைகளில், எத்தனை மாணவர்கள் பயிற்சி பெற முடியும் போன்ற பட்டியல் சேகரிக்கப்பட்டு, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.மாவட்ட மருத்துவமனைகளில் பட்டமேற்படிப்பு மாணவர்கள், 2024 ஜன., மாதம் முதல் பயிற்சி பெறலாம். மருத்துவமனைகள் குறித்த விபரங்கள், மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us