டி.வி.ராமசுப்பையருக்கு பாரத ரத்னா: பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்தல்
டி.வி.ராமசுப்பையருக்கு பாரத ரத்னா: பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்தல்
UPDATED : அக் 30, 2023 12:00 AM
ADDED : அக் 30, 2023 10:30 AM
ஊட்டி:
நீலகிரி மாவட்டம், ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்த, தமிழக பத்திரிகையாளர்கள் சங்க மாநாட்டிற்கு, மாநில தலைவர் ஹரிஹரன், பொதுச்செயலர் பாட்ஷா தலைமை வகித்தனர்.நீதிபதி ராமபார்த்திபன், வருமான வரித்துறை கண்காணிப்பாளர் முருகன், மருத்துவக் கல்லுாரி பேராசிரியர் அன்பானந்தம், மாவட்ட பிரதிநிதிகள், சுற்றுலாத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.மதுரையில் அட்சய பாத்திரம் என்ற பெயரில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் நெல்லை பாலு, சுயமாக சம்பாதித்த பணத்தில் அரசு பள்ளிகளுக்கு நிதி உதவி வழங்கி வரும் ராஜேந்திரன், மக்கள் பயன்பாட்டிற்காக இலவச அமரர் ஊர்தி, மரக்கன்றுகள் வழங்கும் அசோக்குமார் உள்ளிட்டோரின் சிறந்த சேவைகளுக்காக விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.பணிக்காலத்தில் இறந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, அவர்களின் குழந்தைகளுக்கு பள்ளி, கல்லுாரிகளில் இட ஒதுக்கீடு, கட்டண சலுகை வழங்க வேண்டும். பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்றி, செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களை தாக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் சமூக பணிகளை பாராட்டியும், ஜூனியர் விகடன் நிறுவனர் பாலசுப்பிரமணியத்திற்கும் மத்திய அரசு பத்ம விருது, பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
