தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பழங்கால நாணய கண்காட்சி மாணவர்கள் கண்டு வியப்பு

பழங்கால நாணய கண்காட்சி மாணவர்கள் கண்டு வியப்பு

பழங்கால நாணய கண்காட்சி மாணவர்கள் கண்டு வியப்பு


UPDATED : அக் 31, 2023 12:00 AM

ADDED : அக் 31, 2023 04:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2023 12:00 AM ADDED : அக் 31, 2023 04:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி:
பொள்ளாச்சியில் நடந்த பழங்கால நாணய கண்காட்சியில், வைக்கப்பட்டு இருந்த நாணயங்களை, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கண்டு வியந்தனர்.பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில் நாணய கண்காட்சி நடந்தது. சங்க காலத்துக்கு முற்பட்ட, 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க கால, சேர, சோழ, பாண்டிய, பல்லவ, மலையமான் நாணயங்கள் வரிசையாக வைக்கப்பட்டு இருந்தன.இந்தியாவில், வாணிப நோக்கத்தோடு ஆட்சி செய்த இந்தோ டேனிஷ், இந்தோ போர்ச்சுகீஸ், இந்தோ டச் மற்றும் இந்தோ பிரான்ஸ் நாட்டவர்களின் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்டுள்ள நாணயங்களும் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தன. மேலும், இந்திய தலைவர்களை மையப்படுத்தி தபால் தலைகள், அஞ்சல் உறைகள், பணத்தாள்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.கண்காட்சியில், நாணயம், தபால் தலை மற்றும் அஞ்சல் உறை சம்பந்தப்பட்ட தகவல்களும் தெரிவிக்கப்பட்டன. சென்னை நாணயவியல் அமைப்பின் தலைவர் மணிகண்டன், நாணயங்கள், தபால் தலை குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். நாணய சேகரிப்பாளர் ராஜ்குமார், இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.  கண்காட்சியில் இடம் பெற்ற நாணயங்கள், தபால் தலைகளை பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பார்வையிட்டு விளக்கங்களை கேட்டறிந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us