தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மாணவர்களிடையே போதை கலாச்சாரம்: நடவடிக்கை அவசியம்

பள்ளி மாணவர்களிடையே போதை கலாச்சாரம்: நடவடிக்கை அவசியம்

பள்ளி மாணவர்களிடையே போதை கலாச்சாரம்: நடவடிக்கை அவசியம்


UPDATED : நவ 04, 2023 12:00 AM

ADDED : நவ 04, 2023 11:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2023 12:00 AM ADDED : நவ 04, 2023 11:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொடைக்கானல்:
பள்ளிகளில் பயிலும் மாணவர்களை ஒழுக்க நெறியுடன் பயில வலியுறுத்தும் ஆசிரியர்களின் கண்டிப்பு மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியும், தண்டிக்கப்பட்டதால் ஏராளமான மாணவர்கள் பள்ளியை தொடராமல் இடைநிறுத்தம் செய்தும், தொடர்ந்து ஆசிரியர்களின் மீது மாணவர்கள் புகார் தெரிவித்ததால் ஆசிரியர்கள் கண்டிப்பை குறைத்தனர்.மேலும் பள்ளி அருகே போதை வஸ்துக்கள் விற்க அரசு தடை செய்து கண்டிப்பு காட்டினர். இந்நிலையில் அரசு வழிகாட்டும் கண்டிப்பு நடைமுறைகள் பள்ளி அருகே உள்ள கடைகளில் பின்தொடராமல் இஷ்டம்போல் பான் மசாலா, குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் தாராளமாக கிடைக்கும் சூழல் தொடர்கிறது.இணையதள வளர்ச்சியால் மாணவர்கள் பல்வேறு போதை பழக்க வழக்கங்களை இதன் மூலம் தெரிந்து கொண்டும், டாஸ்மாக் மதுபானங்கள் தாரளமாக கிடைக்கும் நிலையில் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகத் தொடங்கினர்.இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறிய போதும் பள்ளி கல்வித்துறை கடும் நடவடிக்கை எடுக்காது மெத்தனம் காட்டுகிறது. இதனால் இன்றைய இளம் தலைமுறை மாணவர்கள் ஏராளமானோர் போதை வஸ்துகளுக்கு அடிமையாகும் சூழல் தொடர காரணமாக உள்ளது.மாவட்டத்தில் பள்ளி வளாகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் தாராளமாக கிடைக்கும் இது போன்ற போதை வஸ்துகளால் மாணவர்கள் பள்ளி நேரங்களில் இதை பயன்படுத்தும் போக்கு அதிகரித்து இருப்பது பெற்றோர்கள் , சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.கொடைக்கானல் மலைப்பகுதி பண்ணைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த வாரம் 5க்கும் மேற்பட்ட மாணவர்கள் போதையிலிருந்து ஆசிரியரை தாக்க சென்ற சம்பவமும், கத்தி, அரிவாளுடன் சுற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட ஆசிரியர் போலீசில் புகார் அளித்தும் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி வழக்கை வாபஸ் பெற்றார்.இருந்தபோதும் மாணவர்களை பள்ளி நிர்வாகமும், போலீசரும் கண்டித்து அனுப்பினர். இது போன்ற போதை கலாச்சாரம் மலைப்பகுதியில் மட்டுமல்லாது மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பரவலாக தென்படுகிறது இதை கட்டுப்படுத்த பள்ளிக்கல்வித்துறை, போதை தடுப்பு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us