தொகுப்பூதிய ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
தொகுப்பூதிய ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
UPDATED : நவ 07, 2023 12:00 AM
ADDED : நவ 07, 2023 10:04 AM
ராசிபுரம்:
தொகுப்பூதிய ஆசிரியர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.தமிழக பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டம், மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்செல்வன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
சி.பி.எஸ்., திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; ஊக்க ஊதிய உயர்வு அரசாணையை மறுபரிசீலனை செய்து, அண்ணாதுரை காலத்தில் வழங்கியது போல், தேர்தல் அறிக்கை, 311ஐ நிறைவேற்ற வேண்டும்; பழைய நடைமுறையை பின்பற்றி, ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை, பணிக்காலமாக கருத வேண்டும்; எமிஸ் ஆன்லைன் பணிகளை பார்க்க, தனி ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்களின் மன உளைச்சலை போக்கும் வகையில் கல்வி சுற்றுலாவாக ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
