பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு போலீசார் சட்ட விழிப்புணர்வு
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு போலீசார் சட்ட விழிப்புணர்வு
UPDATED : நவ 08, 2023 12:00 AM
ADDED : நவ 08, 2023 10:27 AM
அ நிறம் | அளவு
தங்கவயல்:
தங்கவயல் போலீஸ் மாவட்ட பகுதியில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம் சட்டங்கள் குறித்து நேற்று போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தங்கவயல் போலீஸ் மாவட்டத்தில் உள்ள உரிகம், பெமல் நகர், ராபர்ட்சன் பேட்டை, பேத்தமங்களா, ஆண்டர்சன் பேட்டை ஆகிய ஐந்து போலீஸ் நிலைய பகுதிகளை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், சப் - இன்ஸ்பெக்டர்கள், பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.போக்சோ சட்டம்; சைபர் கிரைம் குறித்து எவ்வாறு விழிப்புடன் இருப்பது; குழந்தை திருமணத்தைத் தடுத்தல்; போதைப் பொருள் எதிர்ப்பு; போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் ஆகியவை குறித்து மாணவர், மாணவியரிடம் விளக்கம் அளித்தனர்.
