கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆசிரியர் சங்கத்தினர் சந்திப்பு
கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆசிரியர் சங்கத்தினர் சந்திப்பு
UPDATED : நவ 10, 2023 12:00 AM
ADDED : நவ 10, 2023 09:43 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளை,தேசிய ஆசிரியர் சங்க மாநில தலைவர் பாட்சா, காரை மாவட்ட மாநில துணைத்தலைவர் விநாயகமூர்த்தி, மாவட்டத்தலைவர் வேலாயுதம் மற்றும் ஆசிரியர்கள் சந்தித்து பேசினர்.அப்போது காரைக்கால் ஆசிரியர்களின் பிரச்னைகள் குறித்து பேசினர்.குறிப்பாக,புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு சென்றுள்ள ஆசிரியர்களுக்கு வர வேண்டிய சம்பளம் பாக்கி, போனஸ், இடமாறுதலுக்கான டி.ஏ.,ஆகியவற்றைவிரைவாக வழங்குமாறுகோரிக்கை வைத்தனர்.கோரிக்கைககள்தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கல்வித் துறை அதிகாரிகள் உறுதியளித்தனர்.
