தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மோடி இடம்பெறும் பாடல் கிராமி விருதுக்கு பரிந்துரை

மோடி இடம்பெறும் பாடல் கிராமி விருதுக்கு பரிந்துரை

மோடி இடம்பெறும் பாடல் கிராமி விருதுக்கு பரிந்துரை


UPDATED : நவ 13, 2023 12:00 AM

ADDED : நவ 13, 2023 11:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2023 12:00 AM ADDED : நவ 13, 2023 11:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
அமெரிக்க வாழ் இந்தியர்களான பல்குனி ஷா மற்றும் அவரது கணவர் கவுரவ் ஷா இணைந்து உருவாக்கியுள்ள, பிரதமர் நரேந்திர மோடி இடம்பெற்றுள்ள, சிறுதானியங்கள் தொடர்பான பாடல், கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த, த ரெக்கார்டிங் அகாடமி சார்பில் ஒவ்வொரு ஆண்டும், சிறந்த இசை தொகுப்புகள், பாடல்களுக்கு, கிராமி விருது வழங்கப்படுகிறது. இசை உலகில் மிகவும் உயரிய விருதாக இது கருதப்படுகிறது.இந்நிலையில், அமெரிக்க வாழ் இந்தியர்களான, கிராமி விருது பெற்றுள்ள பிரபல பாடகி பலு எனப்படும் பல்குனி ஷா மற்றும் அவரது கணவர் கவுரவ் ஷா இணைந்து, &'அபன்டன்ஸ் இன் மில்லட்ஸ் என்ற பெயரில் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்தப் பாடல், இந்த ஆண்டுக்கான கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முயற்சியால் இந்த ஆண்டை, மில்லட்ஸ் எனப்படும் சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா., அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, சிறுதானியங்கள் பயிரிடுவது, அதை அதிகளவில் பயன்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. கடந்தாண்டு கிராமி விருது வென்ற பின், பல்குனி ஷா, இந்தியா வந்திருந்தபோது, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, உலகின் பசியை போக்கும் சிறுதானியங்கள் தொடர்பாக ஒரு பாடலை உருவாக்கும்படி மோடி கேட்டுக் கொண்டார். இதன்படி, பல்குனி ஷா மற்றும் கவுரவ் ஷா, சிறுதானியங்கள் தொடர்பான பாடலை, கடந்த ஜூன் மாதம் வெளியிட்டனர். இந்தப் பாடல் தொகுப்பில், பிரதமர் மோடியும் இடம்பெற்றுள்ளார். சிறுதானியங்களின் முக்கியத்துவம், அதன் மருத்துவ குணங்கள் மற்றும் மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்பாக இந்தப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us