வேற்றுமையில் ஒற்றுமை இந்தியா: கவர்னர் தமிழிசை பெருமிதம்
வேற்றுமையில் ஒற்றுமை இந்தியா: கவர்னர் தமிழிசை பெருமிதம்
UPDATED : நவ 16, 2023 12:00 AM
ADDED : நவ 16, 2023 04:33 PM
புதுச்சேரி:
நம் எல்லைகள், மொழிகள், கலாசாரங்கள் வித்தியாசமாக இருந்தாலும் இந்தியர்களாக ஒன்றிணைவது நம் நாட்டின் சிறப்பு என, கவர்னர் தமிழிசை பேசினார்.புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நடந்த ஜார்க்கண்ட் மாநில உதய நாள் விழாவில் அவர், பேசியதாவது:
பிரதமர் மோடி தொடங்கி வைத்த இரண்டு நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்றுள்ளேன். ரூ. 24 ஆயிரம் கோடி திட்டங்கள் பழங்குடியின மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட இருக்கிறது. மகான் பிர்சா முண்டா பிறந்த நாள், பழங்குடியின மக்களுக்கான கவுரவ தினமாக கொண்டாடப்படுகிறது. பிர்சா முண்டாமுதல் சுதந்திரப் போருக்கு வித்திட்டவர்களில் முதன்மையானவராகவும் இருக்கிறார்.பழங்குடியின மக்கள் விவசாயம் செய்வதற்கான உரிமை மறுக்கப்பட்டபோது அதற்காக போராடிவெற்றி பெற்றவர். ஜார்க்கண்ட் மாநிலம் சுரங்கங்களின் இடமாக திகழ்கிறது. அந்த மண்ணைப் போலவே அங்கிருக்கும் மனிதர்களும் நல்ல மனப்பான்மை கொண்டவர்கள். புதுச்சேரியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உழைத்துக் கொண்டிருக்கும் ஜார்க்கண்ட் மாநில சகோதர, சகோதரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இது போன்ற நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாமல் இனிவரும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சந்தித்துக் கொள்வோம். நம் எல்லைகள், மொழிகள், கலாசாரங்கள் வித்தியாசமாக இருந்தாலும் இந்தியர்களாக ஒன்றிணைவது நம் நாட்டின் சிறப்பு என்றார்.
