தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நாளை பள்ளிகள் செயல்படும்; மாவட்ட கல்வித்துறை அறிவிப்பு

நாளை பள்ளிகள் செயல்படும்; மாவட்ட கல்வித்துறை அறிவிப்பு

நாளை பள்ளிகள் செயல்படும்; மாவட்ட கல்வித்துறை அறிவிப்பு


UPDATED : நவ 17, 2023 12:00 AM

ADDED : நவ 17, 2023 10:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2023 12:00 AM ADDED : நவ 17, 2023 10:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
நாளை (18ம் தேதி) பள்ளி வேலை நாள் என்பதால், அரசு துவக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி செயல்படும், என மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வெளியூர் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக, தீபாவளிக்கு மறுநாள் (13ம் தேதி) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனை ஈடு செய்யும் வகையில், நாளை (18ம் தேதி) மாவட்டத்தில் உள்ள அரசு, மாநகராட்சி துவக்க, நடுநிலை, மேல்நிலை பள்ளிகள் செயல்படும் என, மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது.மழை காரணமாக விடுமுறை விடப்படும் நாட்களை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும். அந்தந்த மாவட்ட, தாலுகா மழை நிலவரத்தை பொறுத்து, கலெக்டர், முதன்மை கல்வி அலுவலர், தாசில்தார் முடிவு செய்து கொள்ளலாம் என பள்ளிகல்வித்துறை நேற்று முன்தினம் அறிவுறுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் தொடர் கனமழை பெய்ததால், கடந்த, 9ம் தேதி (வியாழக்கிழமை) பள்ளிகள் விடுமுறை விடப்பட்டது. இதனை ஈடுசெய்ய வரும், நவ., 25ம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் செயல்படுமா என்பது குறித்த அறிவிப்பை, ஓரிரு நாளில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா விரைவில், வெளியிட உள்ளார். தனியார், மெட்ரிக் பள்ளிகளை பொறுத்த வரை அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் முடிவெடுத்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us