தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஈராசிரியர் பள்ளிகளில் சேர்க்கை சரிய காரணம் என்ன?

ஈராசிரியர் பள்ளிகளில் சேர்க்கை சரிய காரணம் என்ன?

ஈராசிரியர் பள்ளிகளில் சேர்க்கை சரிய காரணம் என்ன?


UPDATED : நவ 21, 2023 12:00 AM

ADDED : நவ 21, 2023 10:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2023 12:00 AM ADDED : நவ 21, 2023 10:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை மாவட்டத்தில், 350 ஈராசிரியர் பள்ளிகளில், கடந்தாண்டுகளை ஒப்பிட்டு சேர்க்கை சரிந்ததன் காரணம் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், 1,205 அரசுப்பள்ளிகள் உள்ளன. இதில், ஈராசிரியர்கள் மட்டுமே பணிபுரியும், 350 பள்ளிகளில் 30 மாணவர்களுக்கும் கீழ் படிக்கின்றனர். இப்பள்ளிகளுக்கு, ஆண்டுதோறும் பராமரிப்பு நிதியாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில், ஓராசிரியர் மட்டுமே இருந்த நிலையில், சேர்க்கை சரிந்தாலும், இருவர் நியமிக்க வேண்டுமென, சங்க உறுப்பினர்கள் போராடியதன் அடிப்படையில், தற்போது இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மலைப்பகுதி பள்ளிகள் தவிர, சேர்க்கை சரியும் பள்ளிகள் அடையாளம் கண்டு, அதற்கான காரணம் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐந்து வயதுக்கு மேற்பட்டோர் அப்பகுதியில் இல்லாதபட்சத்தில், அருகாமை அங்கன்வாடி சேர்க்கை விபரங்கள் திரட்டுதல், சேர்க்கை சரிவதற்கான காரணம் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், கொரோனா தொற்றுக்கு பின், அரசுப்பள்ளிகளில் சேர்க்கை அதிகரித்துள்ளது. ஆனால் ஒருசில பள்ளிகளில், சேர்க்கை தொடர்ந்து சரிவதால், அதன் காரணம் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இடைநிற்றல் தடுகின்றனரா என்பதை ஆய்வு செய்யும் பணிகள், ஜனவரி மாதம் முதல் துவங்கப்படும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us