தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘தரமான கல்வி மூலமே பொருளாதார வளர்ச்சி சாத்தியம்’

‘தரமான கல்வி மூலமே பொருளாதார வளர்ச்சி சாத்தியம்’

‘தரமான கல்வி மூலமே பொருளாதார வளர்ச்சி சாத்தியம்’


UPDATED : பிப் 02, 2010 12:00 AM

ADDED : பிப் 02, 2010 11:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 02, 2010 12:00 AM ADDED : பிப் 02, 2010 11:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: “தரமான கல்வி மூலம் தான் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்,” என தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை பேசினார்.


மதுரை காமராஜ் பல்கலை மல்டி மீடியா கல்வி ஆய்வு மையம் மற்றும் காமன்வெல்த்தின் ஆசியாவிற்கான மல்டி மீடியா கல்வி நிலையம் ( சி.இ. எம்.சி.ஏ.,) சார்பில், பல்கலையில் ‘மல்டி மீடியா மூலம் கற்பித்தலில் தர நிர்ணய பன்னாட்டு முகாம்’ நேற்று துவங்கியது. சி.இ.எம். சி.ஏ.,இயக்குனர் ஸ்ரீதர் வரவேற்றார்.


பல்கலை துணைவேந்தர் கற்ப குமாரவேல் தலைமை வகித்தார். அவர்,“தமிழகத்திலுள்ள 27 பல்கலைகளில், மதுரை காமராஜ் பல்கலையில் முதன் முதலாக கடந்த ஆண்டு தமிழக அரசின் தகவல் தொடர்பியல் தொழில் நுட்ப கல்வி மையம் (ஐ.சி.டி.,) சார்பில் பயிற்சி துவங்கியது. கல்லூரிகளை தர நிர்ணயம் செய்ய ‘நாக்’ கமிட்டி உள்ளது. ஆனால், மல்டி மீடியா துறையின் தரத்தை நிர்ணயிக்கும் அமைப்பு இல்லை. தகவல் தொழில் நுட்பம் ( ஐ.டி.,) தலைநகரங்களில் மட்டுமல்லாமல் இரண்டாம் நிலை நகரங்களில் வர வேண்டும். அது கிராமப்புற பின் தங்கிய மற்றும் பெண்களை சென்றடைய வேண்டும்,” என்றார்.


அமைச்சர் பூங்கோதை முகாமை துவக்கி வைத்து பேசியதாவது: பிற மாநிலங்களை விட தமிழகத்தில் உயர்கல்விக்குச் செல்வோர் எண்ணிக்கை 17 சதவீதம் அதிகம். தொழிற்கல்வி நுழைவுத் தேர்வு ரத்தானதால் பொறியியல், மருத்துவத்துறையில் கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு அதிகரித்துள்ளது. கிராமங்களில் முதல் மற்றும் இரண்டாம் தலைமுறையினர் தான் தற்போது கல்வி கற்கின்றனர். நகரங்களில் நான்கு மற்றும் ஐந்தாவது தலைமுறையாக படிக்கின்றனர். அவர்களுக்கு கல்விக்கான பின்புலம் உள்ளது. இவர்களுடன் பிறரை ஒப்பிடக் கூடாது. கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தால் வளர்ச்சியடைவர்.


தரமான கல்வி மூலம் தான் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். அமெரிக்காவில் மல்டி மீடியா மூலம் கற்கும் மாணவர்களிடம் ஆய்வு நடத்தியதில், அது பயனுள்ளதாக இருப்பதாக தெரியவந்துள்ளது. மல்டி மீடியாவில் தர நிர்ணய அமைப்பு ஏற்படுத்த வேண்டும். வீடியோ, அனிமேஷன், கிராபிக்ஸ், டெக்ஸ்ட், சவுண்டு மூலம் கற்பித்தால் எளிதில் புரியும். இதுபோல் பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும். ஐ.சி.டி.,மூலம் 5000 பேருக்கு தகவல் தொழில் நுட்ப பயிற்சி துவங்கியுள்ளது. மேலும் 2.50 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சிஅளிக்கப்படும். அரசின் இ-கவர்னன்ஸ் மூலம் வேலைவாய்ப்பு பெருகும், என்றார்.


பல்கலை மற்றும் ஐ.சி.டி., அகாடமி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. ஐ.சி.டி., தலைமை செயல் அலுவலர் சிவகுமார், பல்கலை பதிவாளர் (பொறுப்பு) அழகப்பன், தொலைக் கல்வி இயக்கக இயக்குனர் வடிவேல் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us