தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கடமை உணர்வுள்ள ராணுவ வீரர்கள் நாட்டிற்கு பெருமை

கடமை உணர்வுள்ள ராணுவ வீரர்கள் நாட்டிற்கு பெருமை

கடமை உணர்வுள்ள ராணுவ வீரர்கள் நாட்டிற்கு பெருமை


UPDATED : டிச 16, 2023 12:00 AM

ADDED : டிச 16, 2023 01:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 16, 2023 12:00 AM ADDED : டிச 16, 2023 01:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னுார்:
உலக அரங்கில் நம் இந்தியா தனித்தன்மையான பெருமை மிகு இடத்தை பிடிப்பதற்கு அனைவரது பங்களிப்பும் அவசியம் என ராணுவ பயிற்சி கல்லுாரி கமாண்டன்ட் லெப்.ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் பேசினார்.நீலகிரி மாவட்டம் குன்னுார் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பில் நாட்டின் கொடி அறக்கட்டளை உதவியுடன் எம்.ஆர்.சி. ஹவாஹில் வளாகத்தில் 108 அடி உயரம் கொண்ட கம்பத்தில் 36 அடி அகலம் 24 அடி உயரம் கொண்ட மூவர்ணக்கொடி திறப்பு விழா நடந்தது.வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரி கமாண்டன்ட் லெப். ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் தேசிய கொடியை ஏற்றிய பேசியதாவது:
எந்த பணியில் இருந்தாலும் நம் கடமையை அர்ப்பணிப்போடு செய்து தேசத்தை முன்னேற்றுவது அனைவரது கடமை. அர்ப்பணிப்பு பணியே மற்றவர்களை ஊக்கப்படுத்தும் சக்தியாக விளங்கும்.விஞ்ஞானம் தொழில்நுட்பம் என அனைத்து பிரிவுகளிலும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி நாட்டிற்கு பலம் சேர்க்க வேண்டும்.தற்போது கூட உலகில் இரு வேறு இடங்களில் போர் நடந்து வருகிறது. இந்நிலையில் ஒரு நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்றால் ராணுவம் பலம் வாய்ந்த சக்தியாக இருக்க வேண்டும்.நம் ராணுவத்தினர் எல்லையில் நாட்டை பாதுகாக்க உயர்ந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள்எப்போதும் கடமை உணர்வுடன் செயல்பட்டு வருவது நம் நாட்டிற்கு பெருமை. உலக அரங்கில் நம் இந்தியா தனித்தன்மையான பெருமைமிகு இடத்தை பிடிப்பதற்கு அனைவரது பங்களிப்பும் அவசியம்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் எம்.ஆர்.சி. கமாண்டன்ட் பிரிகேடியர்சுனில் குமார் யாதவ் நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா எஸ்.பி. சுந்தரவடிவேல் முன்னாள் ராணுவ மூத்த அதிகாரிகள்பள்ளி மாணவர்கள் ராணுவ வீரர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us