sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளி வளாகத்தில் மரம் வெட்டி கடத்தல்

அரசு பள்ளி வளாகத்தில் மரம் வெட்டி கடத்தல்

அரசு பள்ளி வளாகத்தில் மரம் வெட்டி கடத்தல்


UPDATED : ஜன 02, 2024 12:00 AM

ADDED : ஜன 02, 2024 11:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 02, 2024 12:00 AM ADDED : ஜன 02, 2024 11:38 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அனுப்பர்பாளையம்:
அரசு பள்ளி வளாகத்தில் இருந்த பழமையான மரங்கள் வெட்டப்பட்டது குறித்து அப்பகுதியினர் மாநகராட்சி நிர்வாகத்தில் புகார் அளித்தனர்.அனுப்பர்பாளையம்புதுாரில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி வளாகத்தில், 35 ஆண்டுகளுக்கு மேலான வேம்பு மற்றும் 10 ஆண்டு வாகை ஆகிய இரண்டு மரங்கள் இருந்தன. இவ்விரு மரங்களும் நேற்று முன் தினம் அடியோடு வெட்டி அகற்றி அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டது. மரத்தின் வேரால் கட்டடம் மற்றும் குடிநீர் தொட்டி பாதிக்கப்படுகிறது என பள்ளி முன்னாள் மாணவர் அமைப்பு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகத்தை சேர்ந்த சிலர் மரத்தை வெட்ட நடவடிக்கை எடுத்தனர்.மரம் வெட்டுவதற்கான கூலிக்கு மரத்தை வெட்டியவரிடம் அந்த மரத்தை எடுத்து செல்ல அனுமதித்துள்ளனர். மரம் பள்ளி மாணவர்களுக்கு நிழலாக இருந்து வந்தது. அனுமதியின்றி மரம் வெட்டியது குறித்து, அப்பகுதி பொதுமக்கள், மாநகராட்சியில் புகார் தெரிவித்து உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us