UPDATED : ஜன 05, 2024 12:00 AM
ADDED : ஜன 05, 2024 10:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி:
அவிநாசி அரசு கல்லுாரியில், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரியாயிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, சேவூர், கானுார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய நான்கு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டம் மூலம் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி இரண்டு நாட்கள் நடந்தது.மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் நளதம் தலைமை தாங்கினார். நான் முதல்வன் திட்ட ஆசிரியர் பொறுப்பாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார்.நாட்டு நலப்பணித்திட்ட இயக்குனர்கள் தாரணி, பானு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். பொறுப்பு ஆசிரியர் பயிற்றுனர் சுரேஷ், ஆசிரியர் பயிற்றுனர்கள் ஜெயப்பிரியா, சத்யா உட்பட பலர் பங்கேற்றனர்.