UPDATED : ஜன 17, 2024 12:00 AM
ADDED : ஜன 17, 2024 10:55 AM
கோவை:
கர்நாடகாவில் நடந்த தேசிய அளவிலான ரோடு சைக்கிளிங் போட்டியில், கோவை கல்லுாரி மாணவி வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.இந்திய சைக்கிளிங் சம்மேளனம், கர்நாடகா சைக்கிளிங் சங்கம் சார்பில் 28வது தேசிய ரோடு சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி, கர்நாடகா மாநிலம் விஜயபுராவில் நடந்தது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, வெவ்வேறு பிரிவுகளில் போட்டியிட்டனர்.இப்போட்டியில், தமிழக அணி சார்பில் சரவணம்பட்டி குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி மாணவி தமிழரசி, 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ரோடு மாஸ்டர் போட்டியில் பங்கேற்று, வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.வெற்றி பெற்ற மாணவியை, தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம், கோவை மாவட்ட சைக்கிளிங் சங்கத்தினர், கல்லுாரி நிர்வாகிகள், பேராசிரியர்கள் பாராட்டினர்.