UPDATED : பிப் 02, 2024 12:00 AM
ADDED : பிப் 02, 2024 10:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு டிக் எனப்படும் தமிழக அரசின் தொழில் முதலீட்டு கழகம் வாயிலாக சிறப்பு கடன் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. ஒரு நிறுவனத்திற்கு அதிகபட்சம் 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்கு 6 சதவீதம் வட்டி. இதற்கான அவகாசம் நேற்றுடன் முடிவதாக இருந்தது. இந்நிலையில் சிறப்பு கடன் திட்டத்தை பிப். 15ம் தேதி வரை டிக் நீட்டித்துள்ளது.